மகள் நடிகை என்பதை மறந்துவிட்டு பொறுப்பில்லாமல் பேசுவதா?: நடிகரை விளாசும் ரசிகர்கள்
மும்பை: தனுஸ்ரீ தத்தா விவகாரம் குறித்து நடிகர் சக்தி கபூர் அளித்துள்ள விளக்கம் பலரையும் எரிச்சல் அடைய செய்துள்ளது.
பாலிவுட் நடிகர் நானா படகேர் மீது தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் தெரிவித்துள்ளது தான் அங்கு ஹாட் டாபிக். பாலிவுட்காரர்கள் பலரும் இது குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி சீனியர் நடிகர் சக்தி கபூரிடம் கேட்கப்பட்டது.

சக்தி கபூர்
தனுஸ்ரீ, நானா படேகர் விவகாரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது நான் குழந்தையாக இருந்தேன் என்று சக்தி கபூர் தெரிவித்துள்ளார். சம்வம் நடந்தபோது சக்தி கபூருக்கு வயது 56 ஆகும். அப்படி இருந்தும் இப்படி பொறுப்பில்லாமல் காமெடி பண்ணிய அவர் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.

ஷ்ரத்தா கபூர்
தன் மகள் ஷ்ரத்தா கபூரும் ஒரு நடிகை என்பதை மறந்துவிட்டு பேசுகிறார் சக்தி கபூர் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்லும் பழக்கத்தை ஊக்குவித்தவர் என்று முன்பு சக்தி கபூர் மீது புகார் எழுந்தது. மேலும் நடிகைகளை கண்ட இடத்தில் தொட்டார் என்றும் அவர் மீது புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பயம் இல்லை
நடக்காத ஒரு சம்பவம் நடந்ததாக கூறி தனது பெயரை கெடுக்க முயற்சி செய்வதாகக் கூறி நானா படேகர் தனுஸ்ரீக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த வக்கீல் நோட்டீஸுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன். 10 ஆண்டுகள் நான் அமைதியாக இருந்துவிட்டேன். இனியும் சும்மா இருக்க மாட்டேன் என்று தனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.

ராஜ் தாக்கரே
2008ம் ஆண்டு நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்தபோது அவர் பேச்சை கேட்டு தன் காரை ராஜ் தாக்கரேவின் நவநிர்மன் சேனா ஆட்கள் தாக்கியதாக தனுஸ்ரீ தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராஜ் தாக்கரே மற்றும் கட்சியின் பெயரை கெடுப்பதாகக் கூறி தனுஸ்ரீ மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











