பொய், வஞ்சகம், ஏமாற்றம், பழிவாங்கல், கிசுகிசுக்கள்.. இதுதான் சினிமா.. கடுமையாக சாடும் பிரபல நடிகை!

By

மும்பை: பொய், வஞ்சகம், ஏமாற்றம், தீங்கு விளைவிக்கும் கிசுகிசு இதுதான் சினிமாவில் இருக்கிறது என்று பிரபல நடிகை தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு நெபோடிசம் பற்றிய பேச்சு, பாலிவுட்டில் காரசாரமாக நடந்து வருகிறது.

அதாவது வாரிசு நடிகர், நடிகைகள், அவர்கள் அல்லாத 'அவுட்சைடர்கள்' ஆகியோரின் நிலை பற்றி காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

வாரிசு நடிகர், நடிகைகள்

வாரிசு நடிகர், நடிகைகள்

திறமையில்லாத சினிமா பிரபலங்களின் வாரிசுகளால், மற்றவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். வாரிசு நடிகர், நடிகைகளின் சமூக வலைதளங்களுக்கே சென்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து, அவர்களை கடுமையாக விளாசினர். இதனால் சோனாக்‌ஷி சின்ஹா உட்பட சில நடிகைகள், சமூக வலைதளங்களில் இருந்து விலகினர்.

நடிகை தனுஶ்ரீ தத்தா

நடிகை தனுஶ்ரீ தத்தா

இந்நிலையில் இந்தப் பிரச்னை பற்றி நடிகை தனுஶ்ரீ தத்தா கருத்து தெரிவித்துள்ளார். தமிழில் விஷால் ஜோடியாக தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்த இவர், பல இந்தி படங்களில் நடித்திருக்கிறார். இப்போது அமெரிக்காவில் வசித்து வரும் அவர் கூறியிருப்பதாவது: எதிர்மறையாக கிளப்பிவிடும் கதைகள், பொய்கள், வஞ்சகம், உங்களுக்கு தீங்கை விளைவிக்கக் கூடிய கிசுகிசுக்கள் இதுதான் சினிமா.

மோசமான செயல்கள்

மோசமான செயல்கள்

பாலிவுட்டில் உள்ள கலாசாரம் இதுதான். இதை நானும் எதிர்கொண்டேன். அதை அடையாளம் கண்டேன். எனது முதல் படத்தில் இருந்தே பல மோசமான செயல்களை பார்த்திருக்கிறேன். நான் நிராகரித்த படங்களைச் சேர்ந்தவர்களோ, தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடிக்காத வர்களோ என்னைப் பழிவாங்க இதை செய்தார்கள். என்னைப் பற்றிய தவறான செய்திகளை பரப்பினார்கள்.

அணுகுமுறை சரியில்லை

அணுகுமுறை சரியில்லை

அவர்கள் சீனியர்கள் என்பதால் அதை மக்கள் நம்புகிறார்கள். இதைப் புரிந்து கொள்வதற்கே எனக்கு பத்து வருடத்துக்கு மேலானது. உங்களிடம் செய்தி தொடர்பாளர்கள் இல்லையென்றால், மற்றவர்களின் செய்தி தொடர்பாளர்களால் உங்கள் உண்மையான முகம் மாற்றப்படும். புதிதாக சினிமாவில் அறிமுகமாக வருபவர்கள் சில விஷயங்களுக்கு உடன்படவில்லை என்றால், 'அவங்க அணுகுமுறை சரியில்லையே' என்று முத்திரை குத்தி விடுவார்கள்.

ஆலோசகர்கள்

ஆலோசகர்கள்

நட்சத்திர வாரிசுகளுக்கு, சினிமாவுக்கு வரும் முன்பே எல்லாம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அவர்கள் வாழும் சூழல் அப்படி. அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. வழிகாட்டிகளும் ஆலோசகர்களும் அவர்களுக்கு இருக்கிறார்கள். ஆனால், அவுட்சைடர்களுக்கு இது புதிய பிரதேசம் போன்றுதான் இருக்கும். இவ்வாறு நடிகை தனுஶ்ரீ தத்தா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X