அவரை மொத்த சினிமா துறையும் டோட்டலா புறக்கணிக்கணும்.. ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரபல ஹீரோயின் ஆவேசம்
மும்பை: நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியாவை மொத்த திரையுலகமும் புறக்கணிக்க வேண்டும் என்று நடிகை தனுஶ்ரீ தத்தா தெரித்துள்ளார்.
தமிழில் ஜீவா, ஸ்ரேயா நடிப்பில் கோகுல் இயக்கிய படம் ரவுத்திரம். இதில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா.
சென்னையில் பிறந்த கணேஷ் ஆச்சார்யா, இப்போது இந்தி சினிமாவின் பிரபல நடன இயக்குனராக இருக்கிறார்.

ஆபாச வீடியோ
33 வயது பெண் நடன கலைஞர் ஒருவர், கணேஷ் ஆச்சார்யா மீது கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பு புகார் கூறி இருந்தார். அதில், தன்னை ஆபாச வீடியோ பார்க்குமாறு கணேஷ் கட்டாயப்படுத்தியதாகத் தெரிவித்திருந்தார். தேசிய மகளிர் ஆணையம் மற்றும் அம்போலி காவல் நிலையத்தில் அவர் இந்தப் புகாரை கொடுத்துள்ளார்.

நிராகரிக்க வேண்டும்
இந்தப் புகார் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியாவை மொத்த திரையுலகமும் நிராகரிக்க வேண்டும் என்று நடிகை தனுஶ்ரீ தத்தா தெரிவித்துள்ளார். தமிழில், தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் இவர்.

நடிகர்களின் பின்னால்
இது தொடர்பாக, நடிகை தனுஶ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில், சூப்பர் ஸ்டார் நடிகர்களின் பின்னால் ஒளிந்துகொண்டு, இன்டஸ்ட்ரிக்கு வருகிற புதுமுகங்களுக்கு கொடுமைகளையும் துன்பங்களையும் செய்து வருகிறார் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா. தொடர்ந்து அவர் மீது இதுபோன்ற பாலியல் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இன்னும் பலர்
அப்படி இருந்தும் முன்னணி ஹீரோக்களும் நடிகர்களும் அவரைத் தொடர்ந்து தங்கள் படங்களில் பணியாற்ற வைப்பது ஏற்க முடியாததாக இருக்கிறது. அவர் மீது இன்னும் பல பெண் நடன கலைஞர்களும் நடிகைகளும் பாலியல் மற்றும் சம்பள சுரண்டல் உள்ளிட்ட புகார்களை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மிரட்டினார்கள்
தனுஶ்ரீ இந்தியில், ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி படத்தில் நடித்தபோது, நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் இதுகுறித்து வெளியே சொன்னதால் அவர் ஆதரவாளர்கள் மிரட்டினார்கள் என்றும் கூறியிருந்தார். அப்போது உடன் இருந்த நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மீதும் புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications