அந்த பாலியல் புகாரையும் என் விவகாரத்தையும் ஒப்பிடாதீங்க, ஆமா.. பிரபல நடிகை உருக்கமான வேண்டுகோள்!

By

மும்பை: நடிகை கொடுத்து பாலியல் புகார் விவகாரத்தையும் நான் கூறிய புகாரையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்று பிரபல நடிகை கூறியுள்ளார்.

தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்திருப்பவர் இந்தி நடிகை பாயல் கோஷ்.

இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.

ஷோபாவில் தள்ளி

ஷோபாவில் தள்ளி

படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்றும் தன்னை வீட்டில் வந்து சந்திக்குமாறும் அழைத்தார் அனுராக் காஷ்யப். இரவு 7.30 மணிக்கு காஷ்யப் வீட்டுக்குச் சென்றேன். தனியறைக்கு அழைத்துச் சென்றார். திடீரென்று ஷோபாவில் தள்ளி, என் வாயை அழுக்கி பாலியல் வன்கொடுமை செய்தார். பிறகு சுதாரித்து தப்பி வீட்டுக்கு வந்தேன் என்று கூறியிருந்தார்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

இதை அனுராக் காஷ்யப் மறுத்திருந்தார். இதுபற்றி மும்பை போலீசில் புகார் கொடுத்தார் பாயல் கோஷ். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நாளில் இந்தியாவிலேயே இல்லை என்றும் இலங்கையில் இருந்ததாகவும் கூறினார்.

தனுஶ்ரீ தத்தா

தனுஶ்ரீ தத்தா

இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தப் பாலியல் புகாரையும் இந்தி நடிகர் நானா படேகர் மீது தான் கொடுத்த புகாரையும் சம்மந்தப்படுத்த வேண்டாம் என்று நடிகை தனுஶ்ரீ தத்தா கூறியுள்ளார். இவர், தமிழில் விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்துள்ளார்.

நானா படேகர்

நானா படேகர்

தனுஶ்ரீ, ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி படத்தில் நடித்தபோது, நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் இதுகுறித்து வெளியே சொன்னதால் அவர் ஆதரவாளர்கள் மிரட்டினார்கள் என்றும் குடும்பத்தோடு சென்றபோது தாக்கப்பட்டேன் என்றும் கூறியிருந்தார். இந்த மீ டூ புகார், இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நல்லவராக்கும் முயற்சி

நல்லவராக்கும் முயற்சி

இந்நிலையில் அவர் இப்போது கூறியிருப்பதாவது: நானா படேகரை நல்லவராக்கும் முயற்சியில் என் புகாரையும் பாயல் புகாரையும் ஒப்பிட்டு, பணம் வாங்கிகொண்டு சிலர் எழுதி வருகின்றனர். ட்விட்டரிலும் ட்ரோல் செய்து வருகின்றனர். பாயல் கோஷ் விவகாரத்தில் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

மன்னிக்கவும் மறக்கவும்

மன்னிக்கவும் மறக்கவும்

எல்லோரையும் போல அதில் நான் குழப்பமடைந்துள்ளேன். எனக்கு நடந்தது, பாலிவுட்டில் அது ஒரு கரும்புள்ளி. அந்த சம்பவத்துக்குப் பிறகு நான் கடும் கவலை அடைந்தேன். என் வாழ்வை முடித்துக் கொள்ள நினைத்தேன். ஆன்மீகத்தில் இறங்கினேன். பிறகு வாழத் தொடங்கினேன். மன்னிக்கவும் மறக்கவும் நான் தயாராக இல்லை.

என்னிடம் ஏதுமில்லை

என்னிடம் ஏதுமில்லை

நான் தனி மனுஷியாக இருப்பதால் மிகவும் கஷ்டப்பட்டேன். பாலிவுட் வாழ்க்கையை இழந்ததால் என் கஷ்டங்கள் தொடர்கின்றன. அதில் இருந்து மீள முயற்சித்து வருகிறேன். நான் தூண்டப்பட்டால், அதை பற்றி மீண்டும் பேசவும் வழக்குகளை தொடுக்கவும் தயங்க மாட்டேன். ஏனென்றால் இழப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. இவ்வாறு உருக்கமாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X