ரூ. 10 கோடி கேட்டு ஓட்ட வாய் நடிகை மீது வழக்கு தொடர்ந்த தனுஸ்ரீ தத்தா
Recommended Video

மும்பை: தன்னை பற்றி தரக்குறைவாக பேசிய நடிகை ராக்கி சாவந்திடம் ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் தனுஸ்ரீ தத்தா.
பாலிவுட் நடிகர் நானா படகேர் மீது பாலியல் புகார் தெரிவித்த தனுஸ்ரீ தத்தாவை நடிகை ராக்கி சாவந்த் விளாசினார். தனுஸ்ரீ பொய் சொல்வதாக கூறினார்.
இந்நிலையில் ராக்கி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார் தனுஸ்ரீ தத்தா.

ரூ. 10 கோடி
நானா படேகர் மீது தான் பொய் புகார் தெரிவித்ததாக கூறிய ராக்கி சாவந்திடம் ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளா் தனுஸ்ரீ தத்தா. இது குறித்து ராக்கி பதில் தெரிவிக்காவிட்டால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே கிடைக்கும் என்று தனுஸ்ரீயின் வழக்கறிஞர் நிதின் தெரிவித்துள்ளார்.

ராக்கி சாவந்த்
பாலிவுட்டில் ஓட்டை வாய், உளறு வாய் என்று பெயர் எடுத்துள்ளவர் ராக்கி சாவந்த். அவர் வாயை திறந்தாலே பப்ளிசிட்டி தேடுகிறார் என்று பாலிவுட்காரர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா பப்ளிசிட்டி தேடவே நானா படேகர் போன்ற நல்லவர் மீது பாலியல் புகார் தெரிவித்ததாக ராக்கி சாவந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

மீ டூ
தனுஸ்ரீ தத்தாவால் தான் பாலிவுட்டில் மீ டூ இயக்கம் தீவிரம் அடைந்துள்ளது. அவரின் தைரியத்தை பார்த்து தங்களுக்கும் துணிச்சல் வந்து பேசுவதாக நடிகைகள், நடிகர் கூட தெரிவித்துள்ளார்கள். ஆனால் ராக்கியோ தனுஸ்ரீயை விளாசிக் கொண்டிருக்கிறார்.

அமெரிக்கா
தனுஸ்ரீ பற்றி ராக்கி கூறியதாவது, நானா ஜி பற்றி தனுஸ்ரீ பொய் புகார் தெரிவித்துள்ளார். தனுஸ்ரீக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அவர் 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்துவிட்டு எழுந்தார் போன்று. நான் பெண்களை மதிப்பவள் ஆனால் இந்த தனுஸ்ரீ 10 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் இருந்து வந்து கண்டதையும் வாந்தி எடுக்கிறார். அவரிடம் பணம் இல்லாததால் நானா ஜி மீது பழி சுமத்துகிறார் என்றார்.


Click it and Unblock the Notifications











