விஷால் ஹீரோயினுக்கு பாலியல் தொல்லை பற்றி அமிதாப் பச்சன் என்ன இப்படி சொல்லிடாரு!!!

By Siva

மும்பை: நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீ தெரிவித்தது குறித்து அமிதாப் பச்சன் யாரும் எதிர்பார்க்காத பதிலை அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் நானா படேகர் கடந்த 2008ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் நடித்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனுஸ்ரீ தத்தா தெரிவித்தார். இந்நிலையில் 10 ஆண்டுகள் கழித்து தற்போதும் அது குறித்து அவர் பேசியுள்ளார்.

தனக்கு இப்படி ஒரு கொடுமை நடந்தும் இதுவரை யாருமே தட்டிக் கேட்கவில்லை என்று தனுஸ்ரீ பேட்டி அளித்தார்.

தனுஸ்ரீ

தனுஸ்ரீ

தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்த அமிதாப் பச்சனிடம் தனுஸ்ரீயின் புகார் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவரோ நான் தனுஸ்ரீயோ, நானா படேகரோ இல்லை. அப்படி இருக்கும்போது நான் எப்படி கமெண்ட் சொல்ல முடியும் என்று பதில் கேள்வி கேட்டார். அமிதாப் பச்சனின் இந்த பதிலை யாருமே எதிர்பார்க்கவில்லை.

ஆமீர் கான்

ஆமீர் கான்

தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தின் ஹீரோவான ஆமீர் கானிடமும் அமிதாபிடம் கேட்கப்பட்ட அதே கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, நடந்த சம்பவம் பற்றிய விபரம் தெரியாமல் நான் கருத்து தெரிவிக்க முடியாது. அது சரியும் அல்ல. ஆனால் இது போன்ற சம்பவங்கள் எப்பொழுது நடந்தாலும் கவலையானது. இது நடந்ததா என்பதை மக்கள் விசாரிக்க வேண்டும். நான் கருத்து தெரிவிப்பது நல்லது இல்லை என்றார்.

புகார்

புகார்

ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் குத்துப்பாடலுக்கு ஆடியபோது தான் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்தார் தனுஸ்ரீ. இந்நிலையில் அவர் டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா பற்றி கூறியதாவது, அவர் பொய் சொல்கிறார். இரட்டை முகம் கொண்டவர். அவருக்கு என்னால் வேலை கிடைத்தது. ஆனால் என்னையே முதுகில் குத்த முடிவு செய்துவிட்டார். அவர் நானாவுக்கு தான் ஆதரவாக இருப்பார். இது போன்றவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிறார் தனுஸ்ரீ.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

என் போராட்டம் நானா படேகர் அல்லது கணேஷ் ஆச்சார்யாவுக்கு எதிரானது அல்ல. அவர்களுக்கு வேலை கிடைக்கக் கூடாது. அவர்களின் செயலுக்கு அவர்கள் கஷ்டப்பட வேண்டும். பாலியல் புகார் தெரிவிப்பவர்கள் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி உள்ளது. நம் காவல் துறை மற்றும் நீதித்துறையை அப்டேட் செய்ய வேண்டும் என்று தனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X