முழுக்க மாடலிங்கை கலக்கி விட்டு.. சினிமாவுக்கு வந்த தான்யா ஹோப்
ஹைதராபாத்: மாடலிங் என்ற துறையை முறையாக பயின்று திரையுலகில் நுழைந்தவர் தான் தான்யா ஹோப்.
மாடலிங் துறை பயிற்சியை புனேவில் பயின்றார் தான்யா ஹோப். இதன் பின் தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் அப்பட்லோ ஒக்கடுன்டேவடு. தனது இரண்டாவது திரைப்படத்தில் இவர் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

இதன் பின் தமிழில் அருண் விஜய் நடித்து கடந்த வருடத்தின் மிகப் பெரிய வெற்றி திரைப்படமான தடம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் இதில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை இமைபோல கவர்ந்தார் தான்யா ஹோப்.பின்னர் அதே வருடத்தில் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.
கன்னடத்தில் உச்ச நட்சத்திரமான தர்ஷன் நடித்த யாஜாமானா திரைப்படத்தில் நடித்தார். இதில் இவர் ஆடிய பஸ்சான்னி பா பாடல் கேட்டு குத்தாட்டாம் போடாத கால்களே கிடையாது. இதன் பின் தற்போது தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.தடம் படத்தில் மிகவும் ஹோம்லியாக நடித்தார் தான்யா ஹோப்.

மற்ற படங்களில் தனது கவர்ச்சியை அதிகம் காட்டியுள்ளார். யாஜாமான படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்தார். தற்போது இவரின் சமுக வலைதள பக்கங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைபடங்களை வெளியிட்டு வருகிறார் தான்யா ஹோப். இதனை பார்த்த தமிழ் ரசிகர்கள் இது உங்களுக்கு செட் ஆகாது.தடம் படத்தில் நடித்ததை போல நடியுங்கள் கவர்ச்சி எல்லாம் வேண்டாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











