Don't Miss!
- Finance
இப்படி கூட சாப்பிடுவாங்களா? இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ!
- News
எகிறும் தொற்று.. இதுவரை 6,362,197 பேர் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலி.. 555,013,578 பேர் பாதிப்பு
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
நயன்தாரா படத்தில் இணைந்த கருப்பன் பட நடிகை.. இயக்குநருடன் வெளியிட்ட கூலான செல்ஃபி!
சென்னை: மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி, சல்மான் கான், நயன்தாரா நடித்து வரும் படம் காட் ஃபாதர்.
மலையாளத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிஃபர் படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக்கான இந்த படத்தில் கருப்பன் பட நடிகை இணைந்துள்ளார்.
சூரியை ஓவர்டேக் செய்த விஜய்சேதுபதி.. கேஜிஎஃப் 3 எப்படி இருக்கும்.. பிகேவின் டாப் 5 பீட்ஸ் இதோ!
விஜய்சேதுபதியின் கருப்பன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை தான்யா ரவிச்சந்திரன் இயக்குநர் மோகன் ராஜாவுடன் எடுத்துக் கொண்ட க்யூட்டான செல்ஃபியை ஷேர் செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரவிச்சந்திரனின் பேத்தி
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான் நடிகை தான்யா ரவிச்சந்திரன். காதலிக்க நேரமில்லை முதல் கண்டேன் காதலை வரை ஏகப்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், அவரது பேத்தியான தான்யா ரவிச்சந்திரனும் தாத்தாவை போல சினிமாவில் ஆர்வம் கொண்டு பலே வெள்ளையத்தேவா படம் மூலம் அறிமுகமானார்.

கருப்பன் நாயகி
சசிகுமாருடன் பலே வெள்ளையத்தேவா, அருள்நிதியுடன் பிருந்தாவனம் உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் தான்யாவுக்கு பெரியளவில் கை கொடுத்த படம் என்றால் அது விஜய்சேதுபதியுடன் அவர் நடித்த கருப்பன் திரைப்படம் தான். பன்னீர்செல்வம் இயக்கத்தில் கடந்த 2017ல் வெளியான அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை தான்யாவுக்கு கொடுத்தது. தெலுங்கில் ராஜவிக்ரமர்கா எனும் படத்தில் நடித்து அங்கேயும் கால் தடத்தை பதித்துள்ளார்.

காட்ஃபாதர் படத்தில்
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை தான்யா ரவிச்சந்திரன் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, சல்மான் கான் நடிப்பில் உருவாக உள்ள காட்ஃபாதர் படத்தில் இணைந்துள்ளார். அதன் அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் மோகன் ராஜாவுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை ஷேர் செய்து வெளியிட்டுள்ளார்.

என்ன ரோல்
மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நயன்தாரா லூசிஃபர் ரீமேக்கில் நடித்து வருகிறார். அவரது மகள் கதாபாத்திரத்தில் கண்டிப்பாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்க வாய்ப்பில்லை. அந்த டிவி சேனல் நடத்தும் நிர்வாகியாகத்தான் தான்யா ரவிச்சந்திரன் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் உடன்
இதுமட்டுமின்றி இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் நெஞ்சுக்கு நீதி படத்திலும் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து இவர் நடித்துள்ளார். மேலும், நெஞ்சுக்கு நீதி படத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்ட பலர் உள்ளனர். விரைவில் அந்த படம் திரைக்கு வர காத்திருக்கிறது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில்
மேலும், உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் நடித்து வரும் பேப்பர் ராக்கெட் படத்திலும் தான்யா ரவிச்சந்திரன் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இவர் ஷேர் செய்துள்ளார். மேலும், இவர் நடிப்பில் உருவான மாயோன் திரைப்படம் வெகு நாட்களாக வெளியாகாமல் கிடப்பில் கிடக்கிறது.