அதர்வாவுடன் ஜோடி போடும் விஜய் சேதுபதி பட நடிகை!
சென்னை : 100 படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அதர்வா மீண்டும் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
ஒத்தைக்கு ஒத்த, குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே ஆகிய திரைப்படங்கள் அதர்வாவுக்கு வரிசையாக வெளியாக உள்ளது.
இந்நிலையில் மீண்டும் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வாவுக்கு ஜோடியாக கருப்பன் பட நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.

ஆக்சன் ஹீரோ
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் எக்கச்சக்கமான பெண் ரசிகைகளை கொண்டுள்ள நடிகர் அதர்வா சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகவும் கவனத்துடன் இருந்து வருகிறார். அந்த வகையில் இப்பொழுது குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த தள்ளிப்போகாதே, ருக்குமணி வண்டி வருது ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் இளம் இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ள அதர்வா இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் 100 படத்தில் நடித்து ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

ஆக்ஷன் திரில்லர் கதை
எதிர்பார்த்ததை விடவும் ரசிகர்களிடம் 100 படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க இதில் அதர்வா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து கலக்கி இருந்தார். இந்த நிலையில் சாம் ஆண்டன் அதர்வா கூட்டணி மீண்டும் இரண்டாவது முறை இணைய உள்ளதாகவும் இந்த முறை ஆக்ஷன் திரில்லர் கதை எனவும் கூறப்பட்ட நிலையில் இப்பொழுது இதில் கதாநாயகியாக நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடிக்கயிருப்பதாக தெரிகிறது. இவர் இதற்கு முன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கருப்பன் படத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றிருந்தார்.

அருண்பாண்டியன்
அப்பா மகன் பாசத்தை கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருண்பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் அருண்பாண்டியன் இப்பொழுது மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கும் அன்பிற்கினியாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகராக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமோத்
மேலும் இந்தப் படத்தை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிப்ரான் இசையமைக்க உள்ளார் . நடிகை தன்யா மிகக்குறைவான திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அவை அனைத்தும் பேர் சொல்லும் அளவிற்கு இன்றுவரை பிரபலமாக இருக்க அதர்வா சாம் ஆண்டன் கூட்டணி மீண்டும் இணையும் இந்த படத்தில் இவர் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படும் நிலையில் வரும் மார்ச் 8ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.


Click it and Unblock the Notifications











