ஹீரோ பின்னாடி நடி.. ஹீரோயின் சென்ட்ரிக் வேண்டாம்.. நடிகை டாப்ஸிக்கு தொடரும் டார்ச்சர்!
மும்பை: கோலிவுட்டில் தனுஷின் ஆடுகளம் படத்தில் நடித்து அசத்திய நடிகை டாப்ஸி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார்.
தீபாவளிக்கு அவர் நடிப்பில் வெளியான சாந்த் கி ஆன்க் திரைப்படம் தீபாவளி பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.
இந்நிலையில், நடிகை டாப்ஸிக்கு தொடர்ந்து சினிமா துறையில் இருக்கும் பலர் ஹீரோயின் சென்ட்ரிக் படம் பண்ணாதீங்க, ஹீரோ பின்னாடியே நடிங்க என டார்ச்சர் கொடுத்து வருவதை வெளிப்படுத்தி பாலிவுட்டில் புயலைக் கிளப்பியுள்ளார்.

அசுர வளர்ச்சி
தனது விடாமுயற்சியால் பாலிவுட்டில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார் நடிகை டாப்ஸி. அவர் நடிப்பில் வெளியான நாம் ஷபானா, பிங்க், பாட்லா, மன்மர்ஸியான், மிஷன் மங்கள் மற்றும் சாந்த் கி ஆன்க் திரைப்படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் வெற்றியை பதிவு செய்துள்ளன.

ஹீரோயின் சென்ட்ரிக்
பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடிக்காமல், தொடர்ந்து பல ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி முன்னணி நாயகியாக டாப்ஸி வளர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான சாந்த் கி ஆன்க் திரைப்படத்தில் வயதான துப்பாக்கி சுடும் பாட்டியாக நடித்து அசத்தியிருந்தார்.

மிரட்டல் அட்வைஸ்
இந்நிலையில், சினிமா துறையில் இருக்கும் சிலர், ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்காதீங்க, பெரிய ஹீரோக்கள் படங்களில் மட்டும் நடிங்க என மிரட்டல் அட்வைஸ் கொடுத்து வருகின்றனராம். மிஷன் மங்கள் படத்தில் அக்ஷய் குமாருடன் தானே நடித்தேன் என பதிலுக்கு தான் கேட்டாலும், அது பவர்ஃபுல் ஹீரோயின் ரோல் என கூறுபவர்களுக்கு தான் என்ன பதில் அளிப்பேன் என சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார் டாப்ஸி.

கடும் விமர்சனம்
வருண் தவானுக்கு ஜோடியாக ஜூத்வா 2 படத்தில் பயங்கர செக்ஸியாக தான் நடித்த போது தன்னை கடுமையாக விமர்சித்தார்கள். ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்தாலும் வேண்டாம் என்கின்றனர். பின்னர் தான் எதுமாதிரியான படங்களில் தான் நடிக்க வேண்டும் என்று தனக்கே தெரியவில்லை என்றும் டாப்ஸி கூறியுள்ளார்.

கேரக்டர் புடிக்கணும்
மேலும், பெரிய ஹீரோக்கள் படங்கள் என்றாலும், தன்னுடைய கேரக்டர் ரோல் தனக்கு பிடித்திருந்தால் மட்டுமே அந்த படத்தில் நடிக்க சம்மதிப்பேன் என நடிகை டாப்ஸி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Recommended Video

2020ல் செம பிஸி
2019ம் ஆண்டு நடிகை டாப்ஸிக்கு பாலிவுட்டில் வெற்றியாண்டாகவே இருந்தது. இதேப்போல், வரும் 2020ம் ஆண்டிலும் டாப்ஸி நடிப்பில் ராஷ்மி ராக்கெட், தப்பட், சபாஷ் மித்து, ஹாசினா தில்ருபா, உமனியா மற்றும் தட்கா என பல படங்கள் க்யூவில் இருக்கின்றன. மேலும், தமிழில் ஜெயம் ரவியுடன் ஜன கண மன படத்திலும் நடிகை டாப்ஸி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











