மர்டர் மிஸ்ட்ரியா அந்த மாதிரி படமா.. சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் ‘ஹசீன் தில்ருபா’ ஃபர்ஸ்ட்லுக்!
மும்பை: பிங்க், பாட்லா, சாந்த் கி ஆங்க் என பாலிவுட்டில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகை டாப்ஸி, தற்போது வெளியிட்டுள்ள அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாலிவுட் நடிகர் விக்ராந்த் மசாய் உடன் டாப்ஸி இணைந்து நடிக்கவுள்ள மர்டர் மிஸ்ட்ரி படமான ஹசீன் தில்ருபா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை டாப்ஸி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.
பெண்ணின் கால்களின் கீழ் ரத்தம் வடிகிற மாதிரியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நெட்டிசன்கள் சிலர் கடுமையான கண்டனத்தை முன் வைத்து வருகின்றனர்.

பிஸி டாப்ஸி
கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு பறந்த நடிகை டாப்ஸி, பாலிவுட்டில் பிஸியான நடிகையாக மாறியுள்ளார். கடந்த தீபாவளிக்கு வெளியான டாப்ஸியின் சாந்த் கி ஆங்க் திரைப்படம் 50 நாட்களை கடந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. அந்த படத்தில் வயதான துப்பாக்கி சுடும் பாட்டியாக நடித்த டாப்ஸி, நடிப்பில் அடுத்த ஆண்டு இரண்டு படங்கள் வெளிவர இருக்கின்றன.

தப்பட்
அனுபவ் சின்ஹா இயக்கத்தில் அர்ஜுன் கபூருடன் டாப்ஸி இணைந்து நடித்துள்ள தப்பட் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி வெளியாகிறது. அனுபவ் சின்ஹா மற்றும் பூஷன் குமார் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் பானிபட் ஹீரோ அர்ஜுன் கபூருக்கு ஜோடியாக டாப்ஸி நடித்துள்ளார்.
மர்டர் மிஸ்ட்ரி
தப்பட் படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ள நிலையில், பாலிவுட் நடிகர் விக்ரந்த் மசாயுடன் டாப்ஸி நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியாகியுள்ளது. ஹசீன் தில்ருபா என தலைப்பிடப்பட்டுள்ள அந்த படம் மர்டர் மிஸ்ட்ரியாக உருவாகவுள்ளது என்றும், ஆனந்த் எல். ராய் தயாரிப்பில் உருவாகவுள்ள அந்த படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
மன்மர்ஸியான் கதாசிரியர்
கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த மன்மர்ஸியான் படத்திற்கு கதை எழுதிய கனிகா தில்லோன் தான் மர்டர் மிஸ்ட்ரி படமாக உருவாகவுள்ள ஹசீன் தில்ருபா படத்திற்கும் கதை எழுதுகிறார். வினில் மேத்யூ இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை டாப்ஸி தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வைரலாக்கியுள்ளார்.
சர்ச்சை
மர்டர் மிஸ்ட்ரி என்ற அறிவிப்புடன் வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள், இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெண்மையை இழிவுபடுத்துவதாக உள்ளது எனவும் இந்த படத்தை ரிஜெக்ட் செய்ய வேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பெண்மைக்கு இழிவு
பெண்ணியவாதியாக பேசி வரும் நடிகை டாப்ஸி, இதுபோன்ற பெண்களை பொருளாக பார்க்கும் படங்களில் நடிக்க ஏன் ஒப்புக் கொள்கிறார். இது போன்ற படங்களை நீங்கள் செய்துவிட்டு, பிறகு ஆண்களை ஏன் குற்றம் சொல்கிறீர்கள் என இந்த நெட்டிசன் காட்டமாக கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











