கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜாக டாப்ஸி.. வெளியனது ‘சபாஷ் மித்து’ ஃபர்ஸ்ட் லுக்!
மும்பை: இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகை டாப்ஸி நடித்து வருகிறார். தற்போது அந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது தற்போது பேஷன் ஆகி விட்டது. அந்த வகையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த மிதாலி ராஜ் வாழ்க்கை படமாக எடுத்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தனர். அந்த படம் எம்.எஸ்.தோனி தி அன்டோல்டு ஸ்டோரி என்ற பெயரில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.
இதனை அடுத்து சச்சின் வாழ்க்கை வரலாற்றை சச்சின் பில்லியன் ட்ரீம்ஸ் என்று வெளியிட்டனர்.
தற்போது,1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை மையப்படுத்தி "83" என்ற படம் உருவாகி வருகிறது.
அதில் ரன்வீர் சிங், ஜீவா என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.
இந்நிலையில், தற்போது மிதாலி ராஜ் என்ற கிரிக்கெட் வீராங்கனை வாழ்க்கையை படமாக எடுத்து வருகின்றனர். இதில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடிகை டாப்சி நடிக்கிறார்.
இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரியா அவென் எழுதியுள்ளார் மற்றும் ராகுல் என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் சபாஷ் மித்து என்ற பெயரில் வெளிவருகிறது.
ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், படக்குழு மற்றும் நடிகை டாப்சிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











