பொண்டாட்டியை கை நீட்டி அறையிற புருஷங்க கன்னத்தில ஓங்கி விழும் அறை தான் தப்பட்.. டிரைலர் ரிலீஸ்!

மும்பை: டாப்சி நடிப்பில் உருவாகியுள்ள 'தப்பட்' படத்தின் டிரைலர் வெளியாகி பாராட்டுக்களை பெற்று வருகிறது.

டி சீரிஸ் தயாரிப்பில் அனுபவ் சுசிலா சின்ஹா இயக்கத்தில் டாப்சி, பவைல் குலாட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் தப்பட்.

நேற்று தப்பட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலான நிலையில், தற்பொது அந்த படத்தின் டிரைலர் ரிலீசாகி பாராட்டுக்களை குவித்து வருகிறது.

தப்பட் ஃபர்ஸ்ட் லுக்

டைட்டிலுக்கு தகுந்த வாறு நேற்று வெளியான டாப்சியின் தப்பட் பட ஃபர்ஸ்ட் லுக் பாலிவுட் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை டாப்ஸியின் கன்னத்தில் ஓங்கி அறைவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தையும் பாராட்டுக்களையும் பெற்றது.

நோ மீன்ஸ் நோ

நோ மீன்ஸ் நோ

மனைவியாக இருந்தாலும் சரி, விபச்சாரியாகவே இருந்தாலும் சரி, அந்த பெண் நோ சொன்னால் நோ தான். அவளை வற்புறுத்தக் கூடாது என்ற கதையை மையப்படுத்தி பாலிவுட்டில் உருவான பிங்க் படத்தில் நாயகியாக நடித்து அசத்திய டாப்சி, இன்னும் ஒரு படி மேல் சென்று பெண்மையின் வலிமையை உணர்த்தியுள்ள படம் தான் தப்பட்.

என்ன அர்த்தம்?

என்ன அர்த்தம்?

Thappad என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? கன்னத்தில் அறைவது என்பது தான் அர்த்தம். ஒரு அறையை வைத்து ஒரு கதையை உருவாக்க முடியும் என சிந்தித்த இடத்திலேயே படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் என கருத்துக்கள் பரவி வருகின்றன. பொண்டாட்டியை ஓங்கி அறையும் கணவர்களுக்கு பதிலடியாக தப்பட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனைவிக்கு மதிப்பு

கட்டிய மனைவி தானே என, அந்த பெண்ணை கை நீட்டி அறையும் ஆண்களுக்கு திருப்பி கொடுக்கும் சவுக்கடியாக தப்பட் படம் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனைவிமார்களுக்கு கணவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும், அவர்களை தன்னை விட கீழானவர்கள் என நினைத்து கை ஓங்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக படம் உருவாகியுள்ளது.

செம்ம பிஸி டாப்சி

பாலிவுட்டில் நடிகை டாப்சி, தொடர்ந்து பல படங்களில் கமீட் ஆகி நடித்து வருகிறார். கடந்த தீபாவளிக்கு அவர் நடிப்பில் வெளியான சாந்த் கி ஆன்க் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து, மிதாலி ராஜினி பயோபிக் படமான சபாஷ் மித்து மற்றும் ஹாசீன் தில்ருபா என பல படங்களில் நடித்து வருகிறார்.

ஜன கன மண

ஜன கன மண

பாலிவுட்டில் செம்ம பிஸியாக இருக்கும் டாப்சி, தமிழில் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜன கன மண படத்திலும் டாப்சி நடித்து வருகிறார். ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமான டாப்சி, தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் என பல மொழிகளில் அசத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X