மறுபடியுமா டாப்ஸி?: ஒய் திஸ் கொலவெறி....
Recommended Video

மும்பை: நடிகை டாப்ஸி மீண்டும் கோஹ்லி-அனுஷ்காவை வம்புக்கு இழுத்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் இத்தாலியில் ரகசிய திருமணம் செய்தனர். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் இந்தி பட ட்ரெய்லர் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாப்ஸியிடம் திருமணம் பற்றி கேட்கப்பட்டது.

டாப்ஸி
விரைவில் உங்கள் திருமணத்தை எதிர்பார்க்கலாமா என்று செய்தியாளர்கள் டாப்ஸியிடம் கேட்டனர். அதற்கு அவரோ தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்.

இத்தாலி
தற்போது எல்லாம் ஸ்பெயின் அல்லது இத்தாலியில் ரகசியமாக திருமணம் செய்கிறார்கள் என்று நடிகர் சாக்கிப் சலீம் கூற டாப்ஸியோ வெட்கப்பட்டுக் கொண்டே நான் என் திருமணத்தை மறைக்க மாட்டேன் என்றார்.

அனுஷ்கா
கோஹ்லியும், அனுஷ்காவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதை தான் டாப்ஸி விமர்சித்துள்ளார் என்று கூறப்படுகிறது. முன்பும் கூட டாப்ஸி அவர்களை தாக்கிப் பேசினார்.

பரபரப்பு
நான் எந்த தொழில் அதிபரையோ, விளையாட்டு வீரரையோ திருமணம் செய்து மீடியாவை பரபரப்பாக்க மாட்டேன் என்று முன்பு டாப்ஸி கூறினார். அவர் கோஹ்லி, அனுஷ்காவை நினைத்தே அப்படி கூறியதாக பேச்சு கிளம்பியது.


Click it and Unblock the Notifications











