சந்தானத்துடன் ஜோடிபோடும் இரண்டு ஹீரோயின்கள்.. கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா!
சந்தானத்தின் புதிய படத்தில் அவருடன் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.
Recommended Video
சென்னை: சந்தானத்தின் புதிய படத்தில் அவருடன் இரண்டு ஹீரோயின்கள் ஜோடி போடுகின்றனர்.
மசாலா பிக்ஸ், எம்கேஆர்பி புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தினை ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. காதல், காமெடி, ஆக்ஷன், ஃபேண்டஸி கலந்த ஜனரஞ்சகமான படமாக இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடிக்கிறார். சமீபத்தில் வெளியான ஏ1 படத்தில் சந்தானத்துடன் நடித்தவர் இவர். மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்.
இப்படத்தில் மற்றொரு நாயகியாக சுவாதி முப்பலா அறிமுகமாகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 60 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமான செட் போடப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி மாதத்தில் படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











