டார்சன் ஜோ லாரா விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்!
அமெரிக்கா : அமெரிக்காவின் பிரபல நடிகர் ஜோ லாரா விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 58.
விமானத்தில் அவருடன் பயணம் செய்த ஜோ லாராவின் மனைவியும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கணவன் மனைவி இருவரும் விமான விபத்தில் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில்ஆழ்த்தி உள்ளது.

7 பேர் பயணம்
செஸ்னா சி 501 விமானம் அருகிலுள்ள ஸ்மிர்னா ரதர்ஃபோர்ட் கவுண்டி விமான நிலையத்திலிருந்து பாம் பீச் சர்வதேச விமான நிலையத்திற்கு சனிக்கிழமை காலை சிறிய ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 7 பேர் பயணம் செய்திருந்தனர்

உயிரிழந்தார்
இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பெர்சி பிரைஸ்ட் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் விமானத்திருந்த 7 பேரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்ததாக பெடரல் எவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா ஆகியோரும் அடங்குவார்.

நடித்திருந்தார்.
1990களில் அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டார்சன் இன் மன்ஹாட்டன் தொலைக்காட்சி தொடரில் டார்சனாக ஜோ லாரா நடித்திருந்தார். இதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். லாராவின் மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா 1999 ஆம் ஆண்டு பெல்லோஷிப் தேவாலயத்தை நிறுவி உள்ளார். மேலும், நம்பிக்கை அடிப்படையிலான எடை இழப்பு புத்தகத்தை எழுதியுள்ளார்.

குறித்து விசாரணை
ஏரியில் விழுந்த அந்த விமானத்தை மீட்ட அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எஞ்சிய விவரத்தையும் அதிகாரிகள் தற்போது அறிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











