கக்கூஸ் போக டாஸ்க் கொடுப்பது கப்பித்தனமா இல்லையா பிக் பாஸ்?

By Siva

Recommended Video

நிஜ வில்லி மும்தாஜா? இல்ல ஜனனியா?- வீடியோ

சென்னை: கழிவறைக்கு செல்ல டாஸ்க் கொடுப்பது ரொம்ப சில்லறைத்தனமாக இருக்கிறது பிக் பாஸ்.

சோப்பை கரைக்கும் டாஸ்கில் வெற்றி பெற்ற மஞ்சள் நிற அணியின் கட்டுப்பாட்டில் கழிவறைகள் உள்ளது. அதனால் நீல நிற அணியினர் மஞ்சள் நிற அணியினரின் அனுமதி பெற்றுத் தான் கழிவறைக்கு செல்ல வேண்டும்.

அனுமதி அளிக்க அவர்கள் ஏதாவது டாஸ்க் கொடுத்து இம்சை செய்கிறார்கள்.

பாவம்

பாவம்

அடிக்கடி பாத்ரூம் போகிறார் சென்றாயன். அவரே அடக்க முடியாமல் அவசரத்தில் இருக்கும்போது அவரை போய் அந்த டாஸ்க் செய் இந்த டாஸ்க் செய் என்று ஆளாளுக்கு அதிகாரம் செய்கிறார்கள். கழிவறையை பயன்படுத்த டாஸ்க் கொடுப்பது கப்பித்தனமாக உள்ளது பிக் பாஸ்.

மும்தாஜ்

மும்தாஜ்

சாப்பிடாமல் வீம்பு செய்யும் மும்தாஜின் சில செயல்கள் கப்பித்தனமாக இருப்பதாக மகத் கோபப்பட்டார். உண்மையில் பிக் பாஸின் ரூல்ஸ் தான் கப்பித்தனமாக உள்ளது. கழிவறையை கூடவா ஒரு அணியின் கட்டுப்பாட்டில் கொடுத்து வேடிக்கை பார்ப்பது. இந்த லட்சணத்தில் அந்த கழிவறையை கட்டுப்பாட்டில் எடுக்க ஒரு டாஸ்க். வெளங்கிடும்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

நள்ளிரவில் கழிவறைக்கு சென்ற சென்றாயனை டெரா டெரா பாடலை பாடுமாறு கூறி டாஸ்க் கொடுத்தார் மும்தாஜ். பாவம் சென்றாயனுக்கு சரியாக பாடத் தெரியவில்லை. தப்புத் தப்பாக அவர் பாட மறுபடியும் முதலில் இருந்து சரியாக பாடுங்கள் என்று கூறி அவரை டார்ச்சர் செய்தார் மும்தாஜ். பின்னர் உங்கள் அணியிடம் சென்று பாடல் வரிகளை கற்று வாருங்கள் என்று அனுப்பி வைத்தார் மும்தாஜ்.

பாட்டு

பாட்டு

நடுச்சாமத்தில் உச்சா போக முடியாமல் வேறு வழியும் இல்லாமல் தனது அணியினரிடம் சென்று பாடல் கற்க சென்றார். அவசரமாக வருதுங்க, போயிட்டு வந்து பாடுகிறேன் என்று அவர் கூறியதை ஏற்க மறுத்துவிட்டார் மும்தாஜ். ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கியிருக்கிறீர்களே என்று மும்தாஜ் அடிக்கடி கூறியதை பார்த்தால் அவருக்கு சென்றாயன் மீது கடுப்பு இருப்பது மட்டும் தெரிகிறது.

5 முறை

5 முறை

டெரா டெரா டெரா பைட்டு பாட்டின் பல்லவியை 5 முறை பாடிய பிறகே சென்றாயனை கழிவறையை பயன்படுத்த அனுமதித்தார் மும்தாஜ். வெட்டவெளியில் உச்சா போவேன் என்று சென்றாயன் சொன்னது சீப் என்று திட்டினார் மும்தாஜ். அவசரத்தில் துடித்த மனிதரை டாய்லெட்டை பயன்படுத்த விடாமல் டார்ச்சர் செய்த மும்தாஜின் பிகேவியர் தான் சீப் என்று பார்வையாளர்கள் திட்டியது அவரால் கேட்க முடியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X