Dare To Watch: இந்த படம் பார்க்க தைரியம் மட்டும் போதாது.. அதுவும் ரொம்ப முக்கியம்.. சாகத்துணிந்தவன் கதை

சென்னை: எல்லா படங்களும் சினிமா ரசிகர்கள் எல்லாருக்கும் ஆனது கிடையாது என்று சொல்வது போல, சில படங்களை புரிந்து கொள்ள அல்லது சில படங்கள் சொல்ல வரும் கருத்தை கையாளப்பட்டு இருக்கக் கூடிய திரைக்கதையை, படத்தில் உரையாடலை, படத்தில் காட்டப்படும் குறியீடுகளை என எல்லாவற்றையும் புரிந்து கொள்ள சினிமாவைக் கடந்த ஒரு சமூக புரிதல் முக்கியமானதாகிறது. படம் எந்த கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்ற பார்வை மிக மிக முக்கியமானது.

இப்படியான சிக்கலான படங்களை எல்லா இயக்குனர்களும் கையாள்வதில்லை என்றாலும், பெரும்பாலான இயக்குனர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு சிக்கலான அதே நேரத்தில் நேர்த்தியான ஒரு படத்தை எடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

அப்படி உலக அளவில் கவனிக்கப்பட்ட படம் பார்ப்பதற்கே மிகவும் பயமாக இருக்கிறது, அல்லது இப்படி ஒரு கதையை இயக்குனர் எப்படி யோசித்தார், இதை எப்படி இப்படியான திரைக்கதை மூலம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் எழுந்தது, என பல கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழ வைத்த ஒரு படம்தான் டேஸ்ட் ஆப் செர்ரி (Taste of Cherry) என்ற படம்.

Taste of Cherry Dare To Watch A Thought-Provoking Classic That Explores Life Death and Meaning Beyond Cinema

இந்த படம் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியானது. பெர்ஷியன் மொழிப் படமான இந்த படத்தை அப்பாஸ் கியாரோஸ்தாமி என்ற இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதை மிகவும் எளிமையானது என்று சொல்லிவிட முடியும், என்றாலும் படம் "மிஸ்டர் பாதி" என்ற ஒரு மனிதரைச் சுற்றி தான் நகர்கிறது. அவர் தற்கொலை செய்து கொள்ள திட்டமிடுகிறார், ஆனால் அவர் தனது தற்கொலைக்குப் பிறகு தன்னை எப்படி நல்லடக்கம் செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் ஏற்படுகிறது. அதை பணம் கொடுத்து செய்ய ஒருவரை நியமிக்க வேண்டும் அதன் பின்னர் நாம் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார் "மிஸ்டர் பாதி".

கதை: இதற்காக அவர் ஒரு சிப்பாயை அணுகுகிறார். சிப்பாயோ எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பயந்து ஓடி விடுகிறார். அதே போல் ஒரு மத போதகரை அணுகுகிறார், அவரோ தற்கொலை செய்து கொள்வது என்பது மதத்தின் அடிப்படையில் தவறான ஒரு விஷயம் எனக் கூறி அதை எதிர்க்கிறார், அதற்கு உடன்பட மறுக்கிறார்.

திரைக்கதை: இறுதியாகத்தான் வயதான டாக்ஸிடெர்மிஸ்ட்டைச் சந்திக்கிறார். இந்த சந்திப்புக்குப் பின்னர் தான் படம் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. அதாவது அந்த டாக்ஸிடெர்மிஸ்ட் கூறுகையில் நானும், இதற்கு முன்னர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன். ஆனால் அப்பொழுது ஒரு செர்ரி பழத்தை சாப்பிட்டேன். அந்த பழத்தின் சுவை எனக்கு பிடித்து விட்டதால், தற்கொலை செய்து கொள்வதை கைவிட்டு விட்டேன். வாழ்க்கை எப்போதும் பெரிய பெரிய காரணத்திற்காக இல்லை, சின்ன சின்ன அனுபவங்களுக்காகவே வாழலாம் என்று இந்த டாக்ஸிடெர்மிஸ்ட் தெரிவித்த கருத்து "மிஸ்டர் பாதியின்" தற்கொலை முடிவிலிருந்து அவரை விலக்கியதா? இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

கிளைமாக்ஸ்: படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படம் கேன்ஸ் விழாவில் விருது வாங்கி உள்ளது. மிகவும் மெதுவாக நகரும் இந்த படத்தின் திரைக்கதை, அது கையாண்டுள்ள தற்கொலை என்ற மையக் கதை பார்ப்பதற்கே தனி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பார்க்க வேண்டும் என்று பட்டியலிடப்பட்டால் இந்த படத்தை தவிர்க்க முடியாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X