For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆழமான காதலும்.. அர்த்தமும்.. புதிரும் நிறைந்த திரைப்பிரபலங்களின் டாட்டூஸ்!

  |

  சென்னை: காலம் மாறினால் சில விஷயங்கள் மாறுவது இல்லை. அந்த காலத்தில் தன் மனதிற்கு பிடித்தவர்களின் பெயரை கைகளில் அல்லது தோளில் பச்சைக்குத்திக் கொள்வது கிராமத்து வழக்கமாக இருந்தது.

  எழுதப் படிக்காத நிலையில் கூட தனது மாமாவின் பெயரை ஆசை ஆசையாக பச்சைக்குத்திக் கொள்வது உண்டு. ஆழமான அன்பை வெளிப்படுத்த பச்சைக்குத்திக் கொள்ளும் இந்த பழக்கத்தின் நவீன பரிமாணம் தான் டாட்டூஸ் குத்திக் கொள்ளுவது.

  80களில் காணாமல் போன இந்த பச்சைக்குத்தும் பழக்கம், தற்போது மீண்டும் பேஷனாகி வருகிறது. வெறுமென பெயரையோ அல்லது ஏதோவொரு டிசைனை டாட்டூவாக குத்துவதற்கு பதிலாக அதற்குள் ஒரு அர்த்தம், ஒரு புதிர் என தற்போதைய இளைஞர்கள் வேறுலெவலில் டாட்டூக்களை குத்தி வருகிறார்கள்.

  இந்த டாட்டூஸ் குத்துப்பழக்கத்திற்கு திரைப்பிரபலங்களும் அடிமையாகி தங்களுக்கு பிடித்தமான பெயர், பிடித்த விஷயங்களை டாட்டூவாக குத்தி அதை டிரெண்டாக்கி வருகின்றனர். அந்த வகையில் டாட்டூ போட்ட திரைப்பிரபலங்கள் சிலரை பற்றி இப்போது பார்ப்போம்.

  நீங்க இங்க சிங்கம் இல்லை.. என்னை எச்சரித்த சுதா கொங்கரா.. நடிகர் சூர்யா கொடுத்த பரபரப்பு பேட்டி!நீங்க இங்க சிங்கம் இல்லை.. என்னை எச்சரித்த சுதா கொங்கரா.. நடிகர் சூர்யா கொடுத்த பரபரப்பு பேட்டி!

   பாசிட்டிவிட்டி

  பாசிட்டிவிட்டி

  டாட்டூ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது நயன்தாராதான். சினிமாவின் நம்பர்1 நாயகியாக கலக்கி வரும் இவர்,பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் அவை எதுவுமே பட வாய்ப்பை பாதிக்காத வகையில் பார்த்துக்கொண்டார். இவர் நடன இயக்குனர் பிரபுதேவா மீது கொண்ட அதீத காதலால் தனது கையில் பிரபு என பச்சைக்குத்திக் கொண்டார். பின்னர் அந்த காதல் முறிந்ததால் காதல் தோல்விகளை கடந்து தனது திறமையால் இன்று ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். பல தோல்விகள் கண்டாலும் துவண்டு விடாமல் பாசிட்டிவாக இருக்கும் நாயன்தாரா, அதையே தனது கையில், பாசிட்டிவிட்டி என டாட்டூவாக குத்தியுள்ளார்.

   அர்த்தமுள்ள டாட்டூ

  அர்த்தமுள்ள டாட்டூ

  நடிகை சமந்தா தனது உடலில் மூன்று இடங்களில் டாட்டூ குத்தி உள்ளார். வலது கை மணிக்கட்டில் இரட்டை அம்புகள் மாதிரி உள்ள ஒரு சின்னத்தை சமந்தாவும் அதே போல அவருடைய கணவரும் பச்சை குத்தியுள்ளார். இந்த அம்பு சின்னத்திற்கு உங்களுடைய சொந்த வாழ்க்கையை உருவாக்குங்கள் என்று அர்த்தமாம். வலது புற இடுப்பில் தனது கணவர் நாக சைத்தயன்சாவின் செல்லப்பெயர் ‘சாய்‘ என குத்தியுள்ளார். மேலும், முதுகுக்கு பின்புறத்தில் கழுத்துக்கு சற்று கீழே தெலுங்கில், முதன் முதலாக அறிமுகமான ‘ஏ மாக சேகவே‘ படத்தை நினைவு வைத்துக்கொள்ளும் வகையில் ஒய்.எம்.சி என்று பச்சை குத்தியுள்ளார். இந்த டாட்டூக்கள் தெரியும் படி அவர் எப்போதும் போஸ் கொடுத்தது இல்லை எப்போதாவது அவை தெரியும் படி படங்களை பதிவிடுவார்.

  வைரலானது

  வைரலானது

  பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தளபதி விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது யூட்யூப் சேனல் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். வனிதா விஜய குமார், பீட்டர் பால் பெயரை டாட்டு குத்தி, இரண்டு கைகளையும் அருகருகே வைத்து படமெடுத்து இணையத்தில் பதிவிட்டு இருந்தார் இந்த பகிர்வு மிகவும் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டது. இவர், ஏற்கனவே கழுத்துக்கு கீழேயும், வலது கையிலும் பச்சைக்குத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

   அழகான தமிழில்

  அழகான தமிழில்

  அப்பாவை போலவே பன்முக திறமை கொண்ட ஸ்ருதிஹாசன்.நடிப்பு, இசை, நடனம், பாடல் என அனைத்திலும் புகுந்து விளையாடுகிறார். இவ்வளவு திறமையான ஸ்ருதி ஒரு டாட்டூ லவ்வராவர். இவர் உடலில் பல இடங்களில் பச்சை குத்தியுள்ளார். இசையின் மீது உள்ள காதலை குறிக்கும் வகையில் மியூசிக் சின்னத்தை தனது காதுக்கு பின்புறம் குத்தியுள்ளார். மேலும், முதுகில் தனது பெயரை ஸ்ருதி என அழகான தமிழில் போட்டுள்ளார். அடுத்ததாக கையில் ரோஜா பூவையும், காலில் கிஸ் மீ என விதவிதமாக டாட்டூக்களை போட்டுள்ளார்.

   தீராத மோகம்

  தீராத மோகம்

  திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னும் கதாநாயகியாக நடித்து வருகிறார் திரிஷா, டாட்டூ குத்துவதில் ஆர்வம் உடைய இவர் மார்பு, கழுத்து என பல இடங்களில் பச்சை குத்தியுள்ளார். முதலில் தன் மார்பு பகுதியில் மீனின் உருவத்தை டாட்டூவாக குத்தி இருந்தார். பின், கைகளில் காளை சின்னத்தை குத்தி இருந்தார். டாட்டூ மீது தீராத மோகம் கொண்ட முகுது பகுதியில் கேமராவும் கிளாப் போர்ட் சின்னத்தை டாட்டூவாக குத்தியுள்ளார்.

   காலை சுற்றிய பாம்பு

  காலை சுற்றிய பாம்பு

  பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஓவியா, வித்தியாசமான பாய் கட் ஹேர் ஸ்டைலில் அசத்தி இருப்பார். எதை செய்தாலும் அதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் இவர் ஒரு டாட்டூ பிரியர். இவர் தனது வலது கை தோள் பகுதியில் ஒரு பெண்ணின் உருவத்தை டாட்டூவாக குத்தி இருந்தார். அந்த புகைப்படங்கள் வைரலாக பேசப்பட்டன. தற்போது இவர், காலில் பாம்பு சுற்றிக் கொண்டு இருப்பது போல ஒரு டாட்டூவை போட்டுள்ளார்.

  மயிலிறகு

  மயிலிறகு

  சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குனர் அகத்தியனின் மகளாவர் இவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்து நல்ல பெயர் எடுத்த இவர், அண்மையில் வெளியிட்ட ஒரு போட்டோசூட்டில் தனது காலில் மயிலிறகு பச்சை குத்தி இருப்பது தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதில் மயிலிறகு அவரது காலுக்கு அம்சமாக உள்ளது.

   டாட்டூவை நீக்கினார்

  டாட்டூவை நீக்கினார்

  பாலிவுட் நடிகை தீபிகா படுகோனோ ரன்பீர் கபூரை காதலித்து வந்தார். தனது அன்பின் அடையாளமாக அவரது பெயரை சுருக்கமாக ‘ஆர்.கே‘ என தனது பின் கழுத்துப்பகுதியில் டாட்டூவாக குத்தி இருந்தார். பல நிகழ்ச்சிகளில் இந்த டாட்டூக்கள் அப்பட்டமாக தெரிந்தன. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில் லேசர் சிகிச்சை மூலம், அந்த டாட்டூவை நீக்கினார் தீபிகா.

   அன்பின் அடையாளம்

  அன்பின் அடையாளம்

  தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. இவருக்கு ஹாலிவுட் படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பை கிடைத்ததை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஹாலிவுட் ரசிகர்களின் மனங்களில் தனி இடம் பிடித்தார். இவர், தந்தை மீது அலாதி பிரியம் கொண்டவர் அவர் மீது கொண்ட அன்பால் ‘டாட்ஸ் லிட்டில் கேர்ள்‘ டாட்டூவாக குத்தி உள்ளார்.

  English summary
  Tattoos Secret of someof the Famous Actresses.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X