Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
வரி விலக்கு பெற்ற சப்பக் திரைப்படம், பலருக்கு பாடம்
சென்னை : தீபிகா படுகோன் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான 'சப்பக்' என்ற படத்திற்கு மத்தியப் பிரதேச அரசு ஏற்கனவே வரிவிலக்கு அளித்துள்ள நிலையில் தற்போது புதுவை அரசும் வரிவிலக்கு அறிவித்துள்ளது. மேலும் ஒருசில மாநிலங்கள் வரிவிலக்கு அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு பின்பு அதற்கு எதிராக போராடும் பெண்ணாக மாறிய லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் 'சப்பக்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. மேக்னா குல்சார் இயக்கியுள்ள இந்த படத்தில் லட்சுமி அகர்வாலாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளரும் தீபிகா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்திற்கு நேரில் சென்று தீபிகா படுகோன் ஆதரவு தெரிவித்ததால் ஒருசிலர் அவர் மீது விமர்சனங்களை முன் வைத்ததோடு சப்பக் படத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அந்த படத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட்களை கேன்சல் செய்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சப்பக் திரைப்படம் நேற்றுமுன்தினம் ரிலீஸ் ஆன நிலையில், படத்திற்கு மத்திய பிரதேச அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. மேலும் புதுவை முதல்வர் நாராயணசாமியும் வரிவிலக்கு அளித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.