»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாரதி தமிழ் திரைப்படத்திற்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்து தமிழகமுதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னையைச் சேர்ந்த மீடியா ட்ரீம்ஸ் லிமிடெட் என்னும் நிறுவனம் "பாரதி எனும்திரைப்படத்தை தமிழில் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் இப்படத்திற்கு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு அளித்திட வேண்டுமென 27.9.2000 அன்று தமிழக அரசுக்குகடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்திருந்தது.

மகாகவி பாரதியார் நமது நாட்டு சுதந்திரப் போராட்டத்திற்கு தமது பாடல்களின் மூலம்எழுச்சியை ஏற்படுத்திய மாபெரும் தமிழ்க் கவிஞர்.

அவரது வீர வரலாற்றினை இன்றைய தமிழ்ச் சமுதாயம் அறிந்து கொள்வது மிகுந்தநலம் பயக்கும் என்பதால் மீடியா ட்ரீம்ஸ் நிறுவனத்தாரின் கோரிக்கையை அரசுபரிவுடன் ஏற்கிறது.

கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படுவதற்கு எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் 5 முழுகால்ஷீட்டுகள் படமாக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும்,வெளியிடப்படாத திரைப்படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையையும் தளர்த்தி 1.9.2000 முதல் தமிழகம் முழுதும்திரையிடப்பட்டுள்ள "பாரதி திரைப்படத்திற்கு வாரக் கணக்கின்றி, முழுமையாகவேவரி விலக்கு அளித்திட முதல்வர் கருணாநிதி திங்கள் கிழமை ஆணையிட்டுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil