Taylor Swift: 170 கோடி செலவில் பிரம்மாண்ட திருமணம்.. டெய்லர் ஸ்விஃப்ட் - டிராவிஸ் கெல்ஸ் ஜோடியை பாருங்க!

நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் (Taylor Swift) தனது காதலர் டிராவிஸ் கெல்ஸை (Travis Kelce) நியூயார்க் நகரில் உள்ள இன்ஃபோசிஸுக்கு சொந்தமான மேடிசன் கார்டன் ஹோட்டலில் பல ஹாலிவுட் பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டனர்.

சுமார் 170 கோடி வரை டெய்லர் ஸ்விஃப்ட் திருமணத்துக்காக செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கடைசி வரை டெய்லர் ஸ்விஃப்ட் தனது திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தாலும், சில ஹாலிவுட் மீடியாக்கள் அதனை லீக் செய்து பரபரப்பை கிளப்பின.

Taylor Swift and Travis Kelce Officially Married Now with a Big Giant Wedding

இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உலகளவில் டெய்லர் ஸ்விஃப்ட் இசைக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டெய்லர் ஸ்விஃப்ட் - டிராவிஸ் கெல்ஸ் திருமணம்: 36 வயதான பிரபல அமெரிக்க பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் புகழ்பெற்ற அமெரிக்க கால்பந்தாட்ட வீரரான டிராவிஸ் கெல்ஸை காதலித்து வந்த நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். டெய்லர் ஸ்விஃப்ட்டை விட டிராவிஸ் வெறும் 2 மாதங்கள் மட்டுமே வயதில் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

170 கோடி செலவு: பிரம்மாண்ட சொகுசு ஹோட்டலான மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற்ற இந்த திருமணத்தை பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் ஆடம் சாண்ட்லர் தொகுத்து வழங்கினார். ஏகப்பட்ட ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற இந்த திருமண விழாவுக்கு அதிகபட்சமாக 120 முதல் 170 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக பிசினஸ் டுடே தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், திருமண செலவு குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் டெய்லர் ஸ்விஃப்ட் அல்லது டிராவிஸ் தரப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குவியும் வாழ்த்து: 11 வயது முதலே இசை துறையில் கால் பதித்தவர் தான் டெய்லர் ஸ்விஃப்ட். 14 வயதில் தனது முதல் பாடலை பாடி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். Cruel Summer, Blank Space, All too well உள்ளிட்ட ஏகப்பட்ட பாடல்கள் உலகளவில் பிரபலமானவை. சுமார் 273 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் டெய்லர் ஸ்விஃப்ட்டை ஃபாலோ செய்து வருகின்றனர். டெய்லர் ஸ்விஃப்ட் திருமணம் நடைபெற்றதை அறிந்த ரசிகர்கள் உலகளவில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கால்பந்தாட்ட வீரர் டிராவிஸுக்கும் வாழ்த்துக்கள் குவிகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X