தமன்னா போண்டா.. ஹன்சிகா வடை.. ஓகே.. அது என்ன நயன்தாரா டீ? வைரலாகும் டீக்கடை விளம்பரம்!

சென்னை: நடிகைகளின் பெயரில் வடை, போண்டா மற்றும் டீ விற்கும் டீக்கடையின் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

நடிகைகளுக்கு கோவில் கட்டுவது, உணவுப் பொருட்களுக்கு நடிகைகளின் பெயரை வைப்பது ஒன்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு புதிதல்ல. பழகிப்போன விஷயம் தான்.

ஒரு நடிகையின் பெயரில் முதலில் வந்த உணவு என்றால் குஷ்பு இட்லிதான். 20 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்கெட்டில் உள்ளது குஷ்பு இட்லி. இன்றும் குஷ்பு இட்லியை பீட் செய்யும் வகையில் எந்த இட்லியும் வரவில்லை.

தமன்னா போண்டா

தமன்னா போண்டா

இந்நிலையில் சமூக வலைதள பக்கங்களில் டீக்கடையின் விளம்பர போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நயன்தாரா டீ, தமன்னா போண்டா, ஹன்சிகா வடை ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அது என்ன நயன்தாரா டீ?

அது என்ன நயன்தாரா டீ?

இவை அனைத்தும் 5 ரூபாய் விலையிலேயே கிடைக்கிறது. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் இந்த போஸ்டரை பார்த்த மக்கள் தமன்னா போண்டா, ஹன்சிகா வடை ஓகே.. அது என்ன நயன்தாரா டீ? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

எல்லாம் தூக்கலா இருக்குமோ?

எல்லாம் தூக்கலா இருக்குமோ?

ஒரு வேலை நயன்தாரா டீயில் எல்லாமே தூக்கலாக இருக்குமோ என்றும் மக்கள் கமென்ட் அடித்துள்ளனர். இந்த போஸ்டர் தமிழகத்தில் உள்ள ஒரு கடையில் தான் ஒட்டப்பட்டுள்ளது.

மியா கலிஃபா சாப்ஸ்

மியா கலிஃபா சாப்ஸ்

கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் சன்னி லியோன் சாப்ஸ், மியா கலிஃபா சாப்ஸ் என அசைவ உணவிற்கு பெயர் வைக்கப்பட்டது.

அமெரிக்காவில் தோசை

அமெரிக்காவில் தோசை

இதனை தொடர்ந்து அண்மையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பெயரில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தோசை அறிமுகம் செய்யப்பட்டது. நடிகைகள் பெயரில் வைக்கப்படும் உணவுகளுக்கு எப்போதுமே மவுஸ் ஜாஸ்திதான் போல..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X