Coolie: நீங்க ஹெட் மாஸ்டரா.. இல்ல டேன்ஸ் மாஸ்டரா.. தூள் கிளப்புறீங்களே மேடம்.. மோனிகா ரீல்ஸ் வீடியோ!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ராப்பகலாக நடைபெற்று வருகிறது. படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான மோனிகா பாடல் உலக அளவில் டிரெண்டாகிவிட்டது. இந்நிலையில் இந்த பாடலுக்கு பள்ளி மாணவிகளுடன் ஆசிரியை ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதற்கு ரசிகர்கள் நீங்க ஹெட் மாஸ்டரா? இல்ல, டேன்ஸ் மாஸ்டரா? என விளையாட்டாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூலி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாகிர், ஸ்ருதி ஹாசன், அமீர் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் மோனிகா என்ற பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார். இவருக்கு படத்திலும் ஏதாவது கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைத்து உள்ளனர்.

இசை வெளியீட்டு விழா: படத்தில் இருந்து இதுவரை மொத்தம் மூன்று பாடல்கள், வெளியிடப்பட்டுள்ளது. இதில் மூன்று பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், மோனிகா பாடலுக்கு உலக அளவில் கவனம் பெற்றது. படத்தை ஒரே இரவில் உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று விட்டது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
மோனிகா பாடல்: படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான மோனிகா பாடலுக்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பைப் கொடுத்து வருகிறார்கள். பல திரைப்பிரபலங்களே அந்த பாடலுக்கு ரிலீஸ் வெளியிட்டு வருகிறார்கள். ரீல்ஸ் எடுக்க பல செலிபிரிட்டிகள், இன்ஃபுளுயன்சர்கள் என பலரும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு எல்லாம் புறப்பட்டுச் சென்று வீடியோ பதிவிட்டார்கள். அவையெல்லாம் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆசிரியை நடனம்: இப்படி இருக்கும்போது, பள்ளி மாணவிகளுடன் ஆசிரியை ஒருவர் மோனிகா பாடலுக்காக நடனமாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மாணவிகளை நடன போட்டிக்கு தயார் படுத்த பயிற்சி எடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோ போலத் தெரிகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆசிரியையின் நடனம் மிரட்டி விடும் அளவுக்கு இருப்பதால், இணையவாசிகள் பலரும், நீங்க ஹெட் மாஸ்டரா? இல்ல, டான்ஸ் மாஸ்டரா? சத்தியம் பண்ணுங்க எனக் கேட்டு வருகிறார்கள். மேலும் பலர் ஆசிரியையின் நடனத்துக்காகவே பலமுறை இந்த வீடியோவை பார்க்கலாம் என பாராட்டியும் வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கூலி படம் வெளியாக இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் புரோமோஷன் வேலைகள் வேற லெவலில் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











