ஆசிரியர் தினம் : தீபிகா படுகோனே எதையும் பர்ஃபெக்ட்டாக செய்வாள் - அனுபம் கெர்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனுபம் கெர் அவர்களிடம் தங்களுடைய நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்ற ஏதாவது ஒரு பிரபலத்தை பற்றி ஏதாவது ஒரு சுவாரசியமான சம்பவத்தை பற்றி கேட்ட போது அவர் தீபிகா படுகோனேவிற்கு பயிற

சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனுபம் கெர் அவர்களிடம் தங்களுடைய நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்ற ஏதாவது ஒரு பிரபலத்தை பற்றி ஏதாவது ஒருசுவாரசியமான சம்பவத்தை பற்றி கேட்ட போது அவர் தீபிகா படுகோனேவிற்கு பயிற்சி கொடுத்த அந்த நாட்களை நினைவு கூர்ந்து அதை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சிறப்பான நடிப்பால் பாலிவுட் ரசிகர்களை தன் வசம் ஈர்த்த அனுபம் கெர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய அற்புதமான நடிப்பு மூலம் தன்னை நிரூபித்தவர் இன்று முன்னணியில் இருக்கும் பல பாலிவுட் நட்சத்திரங்களுக்கு நடிப்பு பயிற்சியும் அளித்துள்ளார். அனுபம் கெர் ஆக்டர் ப்ரிபேர்ஸ் எனும் தனது நடிப்பு பள்ளியை 2005ம் ஆண்டு எட்டு மாணவர்களுடன் ஒரு சிறிய அளவில் தொடங்கினர்.

Teachers’ Day Deepika Padukone cry Anupam Kher acting school

பலரும் அறியாத ஒரு செய்தி தீபிகா படுகோனே பாலிவுட்டில் அறிமுகமாவதற்கு முன்னர் மூன்று மாதங்கள் அனுபம் கெர் நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்றவர் என்று. அவரிடம் பயிற்சி பெற்று இன்று இந்திய திரையுலகில் மிகவும் திறமையான மற்றும் வெற்றிகரமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. மேலும் வருண் தவான், கீர்த்தி குல்ஹாரி போன்ற முன்னணி நடிகர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளார் அனுபம் கெர்.

Teachers’ Day Deepika Padukone cry Anupam Kher acting school

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனுபம் கெர் அவர்களிடம் தங்களுடைய நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்ற ஏதாவது ஒரு பிரபலத்தை பற்றி ஏதாவது ஒரு சுவாரசியமான சம்பவத்தை பற்றி கேட்ட போது அவர் தீபிகா படுகோனேவிற்கு பயிற்சி கொடுத்த அந்த நாட்களை நினைவு கூர்ந்து அதை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

தீபிகா நடிப்பு பள்ளியில் சேர்வதற்கு முன்னர் ஒரு பெரிய மாடலாக வெற்றிகரமாக இருந்தாள். அவள் செய்யும் அனைத்து விஷயங்களுமே மிகவும்
சரியாகவும், நேர்த்தியாகவும் இருக்கும். அனைத்தையும் பர்ஃபெக்ட்டாக செய்வாள். அதை உணர்ந்த நான் அவளிடம் பள்ளியில் சேர்க்கையிலேயே இங்கு இருக்க போகும் மூன்று மாதங்களும் மிகவும் முக்கியம் எனவே ஓய்வு என்பது கிடைக்காது என்றேன்.

Teachers’ Day Deepika Padukone cry Anupam Kher acting school

நடிப்பு என்பது பர்ஃபெக்ஷன் மட்டும் அல்ல அதில் கடினமான இடங்களும் உள்ளடக்கியதே என்றேன். அவளை கரடு முரடான பாதைகளையும்
கடந்து செல்ல, அவளை மேலும் மேம்படுத்த பயிற்சி கொடுத்தேன். நான் அவளிடம் கண்டுபிடித்ததை அவள் உணரும் வரை எடுத்துக்கூறிய போது அவள் கிட்டத்தட்ட அழவே தொடங்கிவிட்டாள். அன்று அவள் கற்றுக்கொண்ட பாடங்களை அவள் சிறப்பாக தனது கெரியர்ரில் பயன்படுத்திக்கொள்கிறாள் என்று பெருமிதத்துடன் கூறினார் தீபிகா படுகோனேவை சிறந்த நடிகையாக செதுக்கிய அனுபம் கெர்.

Teachers’ Day Deepika Padukone cry Anupam Kher acting school

அனுபம் கெர் மும்பை சிட்டிக்கு நடிப்பு ஆசிரியராக வந்த போது அங்கு எதுவும் முறையாக இல்லை என்பதை புரிந்து கொண்டு பின்னர் வைராகியதோடு ஒரு நடிப்பு பள்ளியை தானாகவே முன்வந்து தொடங்கினர். அகமதாபாத், சண்டிகர் போன்ற இடங்களில் நடிப்பு பயிற்சி வகுப்பை நடத்திவருவதோடு சென்னையிலும் ஒரு கிளையை 2011ல் தொடங்கினர். சென்னையில் இந்த நடிப்பு பயிற்சி பள்ளியை தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ராதிகா சரத்குமாரின் ராடான் டிவி.

பல நடிகர் நடிகைகளுக்கு பயிற்சி அளித்து சிறப்பாக அவர்களை மேம்படுத்தி திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் இந்த ஆசானுக்கு எங்களது ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X