Shiva Rajkumar Birthday - சிவராஜ்குமாருக்கு பிறந்தநாள்.. வாழ்த்து சொன்ன ஜெயிலர் படக்குழு

சென்னை: Shiva Rajkumar (சிவராஜ்குமார்) கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு ஜெயிலர் படக்குழு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறது.

கர்நாடகத்தின் மிகப்பெரிய ஹீரோவான ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ்குமார். 1974ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீநிவாச கல்யாணா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு 1986ஆம் ஆண்டு வெளியான ஆனந்த் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.முதல் படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன.

Team Jailer Birthday wishes to Actor Shiva Rajkumar

முன்னணி ஹீரோ: ராஜ்குமாரின் மகன் என்ற அடையாளத்தோடு ஆரம்பத்தில் சிவராஜ்குமார் அறியப்பட்டாலும் காலம் செல்ல செல்ல தனது திறமையால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். தொடர்ந்து அவர் நடித்த படங்களும் அதிரிபுதிரி ஹிட்டடிக்க கன்னட சக்கரவர்த்தி என்ற அந்தஸ்தையும் பெற்றார். இவரது தம்பிதான் மறைந்த ஹீரோ புனித் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்: மாஸ் ஹீரோவாக மட்டுமின்றி சிறந்த நடிகராகவும் வலம் வந்த அவர் ஓம் படத்துக்காக கர்நாடக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார். அதேபோல் சிகிருடா கனாசு, ஜோஹி உள்ளிட்ட படங்களுக்காகவும் கர்நாடக மாநில அரசு விருதை பெற்றிருக்கிறார். இவை மட்டுமின்றி ஃபிலிம்பேர் விருதுகள், சைமா விருதுகளை வென்று அசத்திய சிவராஜ்குமார் நன்றாக பாடக்கூடியவரும்கூட.

தமிழில் சிவராஜ்குமார்: கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்த சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி ஆகியிருக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தில் சிவராஜ்குமாருக்கு மிக முக்கியமான ரோல் என கூறப்படுகிறது.மேலும் தனது நெருங்கிய நண்பர் ரஜினிகாந்த்துடன் நடிப்பதை மகிழ்ச்சியாக கருதுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கேப்டன் மில்லர்: ஜெயிலர் படம் மட்டுமின்றி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார் சிவராஜ்குமார். அவருக்கான ஷூட்டிங் சில வாரங்களுக்கு முன்னர்தான் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவர் இன்று தனது 61ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

ஜெயிலர் படக்குழு வாழ்த்து: இதனையொட்டி ஜெயிலர் படக்குழு சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லப்பட்டிருக்கிறது. ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஜெயிலர் படக்குழு சார்பாக கர்நாடகா சக்கரவர்த்தி சிவராஜ்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X