twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாரீஸ் பாரீஸ்... பல கட் - சென்சார் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பும் படக்குழு

    பாரீஸ் பாரீஸ்' திரைப்படத்தின் பல காட்சிகளை வெட்டவும் ஆடியோ மியூட் செய்யவும் சொன்னதை அடுத்து இதனை மறுபரிசீலனை செய்வதற்கு ஏதுவாக ரிவைசிங் கமிட்டியின் பார்வைக்கு எடுத்து செல்வது என தயாரிப்பாளர் தரப்பு மு

    By R VINOTH
    |

    சென்னை: பாரீஸ் பாரீஸ் படத்தில் பல இடங்களில் கட்... ஆடியோ மியூட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால் இதனை மறுபரிசீலனை செய்வதற்கு ஏதுவாக ரிவைசிங் கமிட்டியின் பார்வைக்கு எடுத்து செல்வது என தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருக்கிறது.

    பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற 'குயின்' கங்கனா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்திற்கு சென்சார்போர்டு யுஏ சர்டிபிகேட் அளித்தது. குயின் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    Team Paris Paris to approach revising committee

    மீடியண்ட் பிலிம் சார்பாக தயாரிப்பாளர் மனுகுமரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் மிகப்பெரியப் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார்.

    தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் 'பாரீஸ் பாரீஸ்' எனவும், தெலுங்கில் தமன்னா நடிப்பில் 'தட்ஸ் மகாலட்சுமி' எனவும், கன்னடத்தில் பருல் யாதவ் நடிப்பில் 'பட்டர்ஃபிளை' எனவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் 'ஜாம் ஜாம்' எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இதில் தமிழ் மற்றும் கன்னட பதிப்பை நடிகரும், இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார்.

    Team Paris Paris to approach revising committee

    காஜல் அகர்வால் இந்த படத்தில் விருதுநகரைச் சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளார். ஜனவரியில் வெளியான படத்தின் டீசரில் ஒரு காட்சியில் காஜல் அகர்வாலை அவரது தோழி பாலியல் ரீதியாக சீண்டுவது போல இடம்பெற்றிருக்கும். இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் டீசர் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்தது. கோடிக்கானோர் அந்த டீசரை கண்டு ரசித்தனர்.

    இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    Team Paris Paris to approach revising committee

    கன்னடத்திலும், மலையாளத்திலும் சென்சார் சர்டிபிகேட் கிடைத்த நிலையில் தமிழ் ரீமேக் செய்யப்பட்ட 'பாரீஸ் பாரீஸ்' திரைப்படத்திற்கு சென்சார் போர்டு பல ஆடியோ, வீடியோ வெட்டுகள் மற்றும் காட்சி இருட்டடிப்புகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறது.

    இதனை மறுபரிசீலனை செய்வதற்கு ஏதுவாக ரிவைசிங் கமிட்டியின் பார்வைக்கு எடுத்து செல்வது என தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருக்கிறதாம்.

    English summary
    The latest update from the team is that for the Tamil version, the makers have decided to approach the revising committee. Sources say that the makers of the film are planning to simultaneously release all the four versions. The film is being bankrolled by Manu Kumaran under his home banner Mediente Film. Remember that Queen too carried a UA.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X