'வலிமை'யில் பரபரக்கும் ரேஸ்.. டெல்லியில் ஷூட்டிங் நடத்த அனுமதியில்லை.. வேறு இடம் தேடும் டீம்!
சென்னை: வலிமை பட ஷூட்டிங்கை டெல்லியில் நடத்த அனுமதி கிடைக்காததால் வேறு இடத்தை படக்குழு தேடி வருகிறது.
Recommended Video
அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தில் ஷூட்டிங் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.
இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கிறார். ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.

ஹூமா குரேஸி
போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். அஜித் ஜோடியாக, இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிக்கிறார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார். 100 படத்தில் அதர்வாவுக்கு வில்லனாக நடித்த ராஜ் ஐயப்பாவும் இன்னொரு வில்லனாக நடிக்கிறார்.

சேஸிங் காட்சி
வலிமை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர் கொரோனா காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்தப் படத்துக்காக சேஸிங் காட்சி ஒன்று படமாக்கப்பட இருப்பதாகவும் இதற்காக வெளிநாடு செல்வது என்றும் படக்குழு திட்டமிட்டு இருந்தது.

லாக்டவுன் தளர்வு
கொரோனா காரணமாக, அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் சென்னை அல்லது இந்தியாவின் மற்றப் பகுதிகளில் எங்காவது அதை படமாக்கலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி உள்ளன.

வலிமை ஷூட்டிங்
இதையடுத்து சில இயக்குனர்கள் தங்கள் படங்களின் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளனர். அஜித்தின் வலிமை படத்தின் ஷூட்டிங்கும் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. அஜித் இல்லாத காட்சியை படக்குழு படமாக்கி வருகிறது. இதற்கிடையே, வெளிநாட்டில் படமாக்க வேண்டிய ரேஸ் காட்சி ஒன்றை டெல்லியில் படமாக்க படக்குழு முடிவு செய்திருந்தது.

அனுமதி கிடைக்கலை
தயாரிப்பாளர் போனி கபூர், இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்று படக்குழுவினர் நம்பி இருந்த நிலையில், அரசு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து ரேஸ் காட்சியை படமாக்க வேறு இடத்தை தேடி வருவதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











