“டெடி“ அனிமேஷன் சாங்.. என் இனிய தனிமையே.. சிங்கிள்ஸ்க்கு காதலர் தின ட்ரீட் !

சென்னை : டெடி படத்தில் வரும் என் இனிய தனிமையே என்ற பாடலை படக்குழு அனிமேஷனாக வெளியிட்டுள்ளது. காதலர் தினத்தன்று வெளியான இந்த பாடல் சிங்கிள்களினால் கொண்டாடபட்டு வருகிறது .

இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் டெடி. இந்த படத்தில் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். காதலர் தினமான இன்று படக்குழு என் இனிய தனிமையே என்ற பாடலை சிங்களிலாக வெளியிட்டு இருக்கிறது .

Teddy animation song en iniya thanimaye

படத்திற்கு டி.இமான் இசையமைத்து உள்ளார். இந்த பாடலை சித்ஶ்ரீராம் பாடியுள்ளார். அனிமேஷன் பாடலாக வெளியாகி இருக்கிறது என் இனிய தனிமையே பாடல். இந்த பாடலுக்கு வரிகளை கொடுத்து இருக்கிறார் மதன் கார்க்கி .

என் இனிய தனிமையே பாடல் தனிமையாக இருக்கும் போது ஒரு மனிதன் அவன் வாழ்வில் என்னவெல்லாம் செய்கிறான். அவன் அந்த தனிமையை எப்படி நேசிக்கிறான் என்று அழகாக இந்த பாடல் கூறியிருக்கிறது. ஒரு தனிமை வாழ்வு ஒரு மனிதனுக்கு எவ்வாறு பொருமையையும் வாழ்க்கையின் அழகையும் கற்று தருகிறது என மிக அழகாக இந்த பாடலின் வரிகளில் கூறியிருக்கிறார் மதன் கார்க்கி .

Teddy animation song en iniya thanimaye

சித்ஶ்ரீராமின் வழக்கமான ஸ்டெயில் பாடல் போல இல்லாமல் மிகவும் மெல்லினமாக பெருமையாக பாடியிருக்கிறார். பாடலின் இசை சிறு குழந்தைகள் ரசிக்கும் இசை போல வடிவமைக்கபட்டிருக்கிறது. பாடலின் வீடியோ அனிமேஷனில் உருவாக்கபட்டதால் கூட இருக்கலாம் .

காதலர் தினத்திற்கு தனிமை பாடல் டெடி படக்குழுவின் வித்தியாசமான சிந்தனை. இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனுக்கு அனிமேஷன் மற்றும் விஎஃபகஸ் பற்றி அதிகம் தெரியும் என்பதால் சிறப்பான அளவிலே வீடியோவை உருவாக்கியிருக்கிறார் .

Teddy animation song en iniya thanimaye

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் மற்றும் டிக் டிக் டிக் போன்ற தொடர் வெற்றி படங்களுக்கு பிறகு சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி வரும் படமே டெடி. இவரின் முந்தைய படங்களை போல இந்த படத்திலும் இவரின் ஆஸ்தான இசையமைப்பாளரான டி.இமான் இசையமைத்து இருக்கிறார்.

Teddy animation song en iniya thanimaye

என் இனிய தனிமையே பாடல் காதலர் தினத்தில் சிங்கிள்களினால் கொண்டாடபட்டு வருகிறது . இந்த பாடலின் இசையும் வீடியோவும் ஒரு அனுபவத்தையும் தருவது பாடலை திரும்ப திரும்ப பார்க்க வைத்து விடுகிறது . வழக்கம் போல் இல்லாமல் இது டி.இமானின் புது இசையாக கருதபடுகிறது . டெடி படத்தின் மற்ற பாடல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X