வெற்றிகரமாக 50-வது நாளை எட்டிய ஆர்யாவின் டெடி... வேற லெவல் ரெஸ்பான்ஸ்!
சென்னை : ஆர்யாவின் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு வெளியான திரைப்படம் டெடி.
திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டது.
ஓடிடியில் வெளியாகியிருந்தாலும் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்த இப்படம் இப்பொழுது வெற்றிகரமாக 50 நாட்களையும் கடந்துள்ளது.

தொடர்ந்து தோல்விகளை
தமிழ் சினிமாவில் இன்று வரை சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஆர்யாவின் திரைப்படங்கள் சமீபகாலமாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் பிரபல ஹாலிவுட் திரைப் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவானது டெடி.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில்
டிக் டிக் டிக் திரைப்படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்திருக்க ஜோடியாக சாயிஷா நடித்திருந்தார். தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் புதுமையாக பேசும் டெடி பொம்மையை கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்க திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சில காரணங்களால் ஓடிடியில் நேரடியாக கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி வெளியானது.

50 நாட்களை
வெளியான நாள் முதலே ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வந்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. காமெடி,காதல், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த ஒரு புது அனுபவத்தை கொடுத்த இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றாலும் ஓடிடியில் அமோக ஆதரவைப் பெற்று இப்பொழுது 50 நாட்களையும் கடந்துள்ளது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்
மேலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் டெடி ஓடிடி தளத்தில் அமோக ஆதரவைப் பெற்று தரமான வசூலை குவித்துள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படங்களிலேயே டெடி அதிக அளவு ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











