மதன் கார்க்கியின் வரிகளில்.. அனிருத் குரலில்.. நண்பியே.. இன்று டெடியின் அடுத்த சிங்கிள்!

சென்னை : டெடி படத்தின் அடுத்த சிங்கிள் 'நண்பியே' இன்று மாலை வெளியாக உள்ளது.

மகாமுனி மற்றும் காப்பான் படங்களுக்கு பிறகு ஆர்யா நடித்து இருக்கும் படம் டெடி. இப்படத்தில் ஆர்யா உடன் சாயிஷா மற்றும் நடிகர்கள் சதிஷ் , கருணாகரன் நடித்துள்ளனர். நாய்கள் ஜாக்கிரதை மற்றும் டிக். டிக். டிக் போன்ற படங்களை இயக்கிய சக்தி சவுந்திர் ராஜன் இப்படத்தை இயக்குகிறார்.

 Teddys next single is Nanbiye due to be released this evening

டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்டுடியோ கீரின் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். மகாமுனி வெற்றிக்கு பிறகு ஆர்யா அடுத்து என்ன படம் நடிக்க போகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. காரணம், மகாமுனி படத்தில் ஆர்யா இதுவரை அவரது படங்களில் இல்லாத அளவுக்கு நடித்து இருந்தார். மகா மற்றும் முனி என இரு வேடங்களும் அவருக்கு நல்ல வரவேற்பை மக்களிடையே பெற்று தந்தது.

இதனை அடுத்து அவர் நடித்து இருக்கும் டெடி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் முடிக்கப்பட்டது. படம் முடிந்த சில நாட்களிலே இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது படக்குழு. அதில் ஆர்யா தூப்பாக்கியுடனும் அவரின் பின்னால் ஒரு டெடி பியர் பொம்மை ஒன்றும் இருப்பது போல் கலர் புல்லாக இருந்தது இப்படத்தின் பர்ஸ்ட் லுக்.

இதனை பார்த்த திரை ரசிகர்கள் அச்சமயத்தில் இது ஹாலிவுட் படமான டெட் என்ற படத்தை போல் உள்ளதே என கருத்து பதிவிட்டு வந்தனர். டெட் என்ற படம் சொல்லிய விஷயம் டெடி பியர் ஒன்று படத்தின் ஹீரோ உடன் - ஒரு உயிர் உள்ள உருவமாக மாறி வாழும் கதையம்சம் கொண்ட திரைப்படம்.

 Teddys next single is Nanbiye due to be released this evening

அதனை போல தான் இப்படமும் இருக்குமா என்ற கேள்விக்கு டிரெய்லர் வந்ததும் விடை தெரிந்துவிடும்.

கடந்த காதலர் தினத்தன்று இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. அந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது டெடி படத்தின் அடுத்த பாடல் "நண்பியே" என்று மதன் கார்க்கியின் வரிகளில் பாடல் உருவாகியுள்ளது. இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார் இவர் டி. இமானுக்காக பல பாடல்களை பாடியுள்ளார் அவை அனைத்தும் ஹிட் ஆகி உள்ளன.

 Teddys next single is Nanbiye due to be released this evening

அந்த வரிசையில் இந்த பாடலும் ஹிட் ஆகும் என்று சொல்லப்படுகிறது. படம் 2020 சம்மரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்காக படக்குழு வெளியிட்ட போஸ்டர் கலர் புல்லாக உள்ளது என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர், மேலும் போஸ்டர்ரை பார்த்து கொண்டே இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X