மீண்டும் கூட்டணி அமைக்கும் டெடி டீம்.... இந்த முறை ஆக்ஷன் படமாம்!
சென்னை : நடிகர் ஆர்யா மற்றும் சக்தி சவுந்தரராஜன் கூட்டணியில் வெளியான படம் டெடி.
டெடி பொம்மையை முக்கிய கதாபாத்திரமாக்கி அதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ஓடிடியில் கடந்த மார்ச் மாதத்தில் இந்த படம் வெளியானது.
இந்நிலையில் ஆர்யா மற்றும் சக்தி சவுந்தரராஜன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெடி படம்
நடிகர் ஆர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இயக்குநர் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதத்தில் ஒடிடியில் வெளியான படம் டெடி. குழந்தைகளை இந்த படம் வெகுவாக கவர்ந்தது. சாயிஷா மற்றும் மகிழ் திருமேனியும் படத்தில் லீட் ரோல்களில் நடித்திருந்தனர்.

உறுப்பு கடத்தல்
ஆனால் இவர்களை காட்டிலும் படத்தில் டெடியின் ஆட்டமே சிறப்பாக அமைந்திருந்தது. இமான் இசையின் என் இனிய தனிமையே பாடல் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. உடல் உறுப்பு கடத்தலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

புதுமையான கதைக்களம்
மிருதன், டிக் டிக் டிக், நாய்கள் ஜாக்கிரதை என வித்தியாசமான வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் சக்தி சவுந்தரராஜன் இந்த படத்தின் கதையையும் புதுமையாக அமைத்திருந்தார். ஆர்யா மற்றும் சாயிஷா இடையிலான எமோஷனல் காட்சிகளும் சிறப்பாக அமைந்திருந்தன.

ஆக்ஷன் எண்டர்டெயினர்
இந்நிலையில் நடிகர் ஆர்யா மற்றும் சக்தி சவுந்தரராஜன் மீண்டும் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் டெடியின் மறுபாகம் இல்லை என்றும் ஆக்ஷன் எண்டர்டெயினர் என்றும் கூறப்பட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் உள்ளிட்டவை விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது,


Click it and Unblock the Notifications











