திருமண நாள் அன்று ஆர்யாவுக்கு கிடைத்த அழகான பரிசு.. வைரலாகும் டெடி படத்தின் புதிய ஸ்நீக் பீக்!
சென்னை: நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் இன்று தங்களது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.
ஆர்யாவின் திருமண நாளை முன்னிட்டு டெடி படத்தின் புதிய ஸ்நீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஆர்யாவும், சாயிஷாவும் மாற்றி மாற்றி ட்விட்டரில் ரொமான்டிக் புகைப்படங்களையும் ஷேர் செய்து ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகின்றனர்.

காதல் திருமணம்
கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஆர்யா. இன்று தனது திருமண நாளை கொண்டாடி வருகிறார். காலையிலேயே மனைவியுடன் படு ரொமான்டிக்காக மரத்தின் மீது கூடு போன்ற வீட்டில் இருவரும் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மனைவிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

எப்போதுமே காதலிப்பேன்
ஆர்யாவின் ட்வீட்டை பார்த்த நடிகை சாயிஷா அவரும் ஒரு ரொமாண்டிக் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஜான்.. இப்போதும், எப்போதும் உன்னை காதலித்துக் கொண்டே இருப்பேன் என பதிவிட பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்தினர்.
திருமண நாள் பரிசு
ஆர்யாவின் திருமண நாள் பரிசாக டெடி படக் குழுவினர் டெடி படத்தின் புதிய ஸ்நீக் பீக் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர். ரயிலில் தனியாக இருக்கும் பெண்ணுக்கு சில ரவுடிகள் தொல்லைக் கொடுப்பதும் ஹீரோ களமிறங்கி வெளுத்து வாங்கும் சண்டைக் காட்சியை வெளியிட்டுள்ளனர்.

டெடி பொம்மை
அதை ஒளிந்திருந்து பார்க்கும் உயிருள்ள டெடி பொம்மை ஆர்யா தான் நமக்கு பாதுகாப்பாக இருப்பார் என நினைத்து அவரை பின் தொடர்வதாக இந்த புது ஸ்நீக் பீக் இடம்பெற்றுள்ளது. டெடி படத்தின் ஸ்நீக் பீக்கை ஆர்யா ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

2 நாட்களில்
இயக்குநர் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள டெடி திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் மார்ச் 12ம் தேதி வெளியாகிறது. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், இன்னமும் பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஒடிடியில் வெளியாவதை தவிர்க்க முடியவில்லை. டெடி படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டுகளிக்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications