மீண்டும் லவ்வர் பாயான அசுரன் டீஜே.. ஆண்ட்ரியாவுடன் ரொமான்ஸ்!
அசுரன் படத்தில் வெறித்தனமான மூத்த மகன் கதாபாத்திரத்தில் நடித்த டீஜே, ஆண்ட்ரியாவுடன் புதிய ஆல்பம் பாடலை உருவாக்கி வருகிறார்.
Recommended Video
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
இந்த படத்தில் தனுஷின் மூத்த மகன் முருகன் கதாபாத்திரத்தில் ஆல்பம் பாடல்களில் கலக்கி வந்த டீஜே அருணாச்சலம் நடித்துள்ளார்.
இளைய மகன் சிதம்பரம் கதாபாத்திரத்தில் கருணாஸ் மகன் கென் கருணாஸ் நடித்திருந்தார்.
ஆல்பம் ஹீரோ
பின்னணி பாடகரான டீஜே, தனது ஆல்பம் பாடல்களில் தானே ஹீரோவாக நடித்து இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். இவரது இசையில் வெளியான "முட்டு முட்டு", "எனக்கொரு ஆசை', "தேன் குடிக்க" போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றன.

மூத்த மகன்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ள அசுரன் படத்தில், சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்த தனுஷின் மூத்த மகன் முருகன் கதாபாத்திரத்தில் டீஜே நடித்திருந்தார். குறைந்த நேரமே படத்தில் டீஜே வந்தாலும், அவருக்கான கதாபாத்திரம் தான் படத்தையே நகர்த்தி சென்றது என்று சொல்லலாம்.

ஆண்ட்ரியாவுடன்
அசுரன் படத்தில் வெறித்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த டீஜே, மீண்டும் தனது ரொமான்டிக் மோடுக்கு மாறியுள்ளார். நடிகை ஆண்டிரியாவுடன் இணைந்து "நண்டூறுது நரியூறுது" என்ற புதிய ஆல்பம் பாடலை டீஜே உருவாக்கியுள்ளார். அதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
வெகு விரைவில்
அசுரன் படத்தின் மூலம் டீஜேவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல என்ட்ரி கிடைத்துள்ளது. அவரது நடிப்பை பல பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். தனது ஆல்பம் பாடல்கள் மூலம் ஏற்கனவே பிரபலமான டீஜே, தன்னால், சிறப்பாக நடிக்கவும் முடியும் என அசுரன் படத்தின் மூலம் ப்ரூவ் பண்ணியுள்ளார். இதனால், விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கவுள்ளார் டீஜே.


Click it and Unblock the Notifications











