twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'முரளிதரன் பயோபிக்கில் நடிக்க என்னை அழைத்தார்கள்.. உடனே மறுத்துவிட்டேன்..' அசுரன் பட நடிகர் தகவல்!

    By
    |

    சென்னை: முரளிதரன் பயோப்பிக்கில் நடிக்க தன்னை அணுகியதாகவும் தான் மறுத்து விட்டதாகவும் பிரபல நடிகர் கூறியுள்ளார்.

    இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதை, சினிமாவாகிறது.

    இதில் விஜய் சேதுபதி, முரளிதரனாக நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

    சிம்பிளி வேஸ்ட்.. மொத்தபேரையும் அசிங்கப்படுத்திய அர்ச்சனா.. பத்தவச்ச பிக்பாஸ்.. கிர்ரான ஹவுஸ்மேட்ஸ்!சிம்பிளி வேஸ்ட்.. மொத்தபேரையும் அசிங்கப்படுத்திய அர்ச்சனா.. பத்தவச்ச பிக்பாஸ்.. கிர்ரான ஹவுஸ்மேட்ஸ்!

    வலுக்கும் எதிர்ப்பு

    வலுக்கும் எதிர்ப்பு

    இந்த படத்துக்கு '800' என தலைப்பு வைத்துள்ளனர். 'கனிமொழி' படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். விஜய் சேதுபதி, முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது உறுதியானதை அடுத்து அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

    மோஷன் போஸ்டர்

    மோஷன் போஸ்டர்

    சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர், செவ்வாய்க்கிழமை வெளியானதை அடுத்து எதிர்ப்பு மேலும் வலுத்தது. இதையடுத்து ஷேம் ஆன் விஜய் சேதுபதி என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.

    இயக்குனர் பாரதிராஜா

    இயக்குனர் பாரதிராஜா

    இயக்குனர் சீனு ராமசாமி, சேரன், பாடலாசிரியர் தாமரை உள்பட பலர் அவர், அந்த படத்தில் நடிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தனர். பல்வேறு தமிழ் அமைப்புகளும் விஜய் சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜாவும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

    தமிழின வெறுப்பாளன்

    தமிழின வெறுப்பாளன்

    அவர் வெளியிட்ட அறிக்கையில், இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம், காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா? எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள் என்று கூறியிருந்தார்.

    இளம் வயது முரளிதரன்

    இளம் வயது முரளிதரன்

    இந்நிலையில் இந்தப் படத்தில், இளம் வயது முரளிதரனான நடிப்பதற்கு மறுத்துவிட்ட தகவலை கூறியிருக்கிறார், நடிகர் டிஜே அருணாச்சலம். இவர் அசுரன் படத்தில் தனுஷ் மகனாக நடித்தவர். இதுபற்றி அவர் கூறியதாவது: நான் சென்னையில் இருந்தபோது, 800 படத்தின் இயக்குனர் அழைத்திருந்தார். சந்தித்தேன். கதையை சொன்னார்.

    ஈழத்தைச் சேர்ந்தவர்

    ஈழத்தைச் சேர்ந்தவர்

    சிறுவயது முரளிதரனாக நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்தப் படத்தில் ஈழத்தமிழரின் போர் விவரங்கள் இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் என் அம்மா, ஈழத்தைச் சேர்ந்தவர். தமிழீழப் போரில் ஏராளமான கொடூரங்கள் நடந்தன. அதனால் இந்தப் படத்தால் நடக்கும் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை.

    கடினமான முடிவுதான்

    கடினமான முடிவுதான்

    இதில் நடிக்க மறுத்துவிட்டேன். இது எனக்கு கடினமான முடிவுதான். நடிகர் விஜய் சேதுபதி மீது எனக்கு மரியாதை உண்டு. அசுரன் படத்தைப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டினார். கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார்.

    இவ்வாறு டீஜே கூறியுள்ளார்.

    English summary
    Teejay Arunasalam said no to Vijay Sethupathi’s Muralidaran biopic because of its politics.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X