சினிமாவை விட்டு விலகி.. கண்காணாம மறைஞ்சே போயிடலாம்னு முடிவெடுத்தேன்.. பார்த்திபன் உருக்கமான பதிவு!

சென்னை: டீன்ஸ் படத்தை இயக்கி நடித்துள்ள பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில், டீன்ஸ் படத்துக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றால், சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஒத்தசெருப்பு சைஸ் 7 படத்தைத் தொடர்ந்து இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து டீன்ஸ் படத்தை இயக்கிய பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. பிரபாஸ் நடித்த கல்கி AD திரைப்படம், இந்தியன் 2 என பிரம்மாண்ட படத்திற்கு மத்தியில் வெளியான படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

teenz parthiban

டீன்ஸ் படத்தின் கதை: 12 சிறுவர்கள் ஆரம்பத்திலேயே தாங்கள் சிறுவர்கள் இல்லை பாரீன் போல் நம்ம நாட்டிலும் சிறுவர்களை பெற்றொர்கள் தங்களுக்கு ஈகுவலாக பார்க்க வேண்டும் என்று பேசும் குழந்தைகள் தங்களை குழந்தைகளாக காட்டிக்கொள்கின்றனர். இதையடுத்து 12 சிறுவர்கள் ஒரு சிறுமியின் பாட்டி ஊரில் பேய் இருப்பதாக சொல்ல அதையும் பார்த்துவிடலாம் என பள்ளிக்கு கட் அடித்து செல்கின்றனர். அப்படி செல்லும் வழியில் ஒரு பையனை இழுத்துக்கொண்டு 13 பேராக அந்த ஊருக்கு செல்கின்றனர்.

ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்: அவர்கள் செல்லும் வழியில் போராட்டத்தால் போக்குவரத்து தடை பெறுகிறது. அதை தொடர்ந்து காட்டு வழியில் சிறுவர்கள் பயணிக்க, செல்லும் இடமெல்லாம் ஒருவர் ஒருவராக தொலைந்து செல்கின்றனர். என்ன என்று புரியாமல் சிறுவர்கள் முழிக்க, அடுத்தடுத்து தொலைந்து போகும் சிறுவர்களை மற்ற சிறுவர்கள் தேட, பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை. முதல் பாதியில் ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் கொடுத்து அழகாக கதையை கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் பார்த்திபன்.

உருக்கமான பதிவு: இந்நிலையில் பார்த்திபன் தனது எக்ஸ் தளபக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், Friends, சத்தியமா சொல்றேன்... TEENZக்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லோரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான் 'ஓ'ன்னு சந்தோஷத்தில அழுவுறது உங்களுக்கு கேக்க வாய்ப்பே இல்லே. இது போதாது இன்னும் ஆதரவு தந்து பலரும் பாக்க உதவி செஞ்சி என்னை சந்தோஷத்தில சாகடிங்க. அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு science fiction & fantasy thought ல் எடுக்கப் பட்ட இப்படம் பள்ளிகளும் கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும்.

teenz parthiban

நன்றி :பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு

வரம் : வரவிருக்கும் தூய்மையான வெற்றி.

நனைந்த இமைகளோடு, இராதாகிருஷ்ணன் பார்த்திபன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X