twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெலுங்கானா பிரிவினை தெலுங்குத் திரையுலகை பாதிக்குமா??

    By Mayura Akilan
    |

    ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலப் பிரிவினையால் தெலுங்குத் திரையுலகம் பாதிக்காது என்று அத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    ஆந்திராவைப் பிரிக்கும் முடிவைத் தொடர்ந்து பெரும் குழப்பம் தெலுங்குத் திரையுலகம் குறித்து எழுந்துள்ளது.

    ஆனால் இந்தப் பிரிவினையால் தெலுங்குத் திரையுலகம் பாதிக்கப்படாது என்று அத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் உடனடியாக இழப்பு ஏதும் ஏற்படாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    ரூ. 120,000 கோடி வருவாய்

    ரூ. 120,000 கோடி வருவாய்

    தெலுங்குத் திரையுலகம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இத்துறை ஆண்டுக்கு ரூ. 12,000 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டுகிறது.

    ஆண்டுக்கு 150 படங்கள்

    ஆண்டுக்கு 150 படங்கள்

    தெலுங்கில் ஆண்டுக்கு 150 படங்கள் வரை தயாரிக்கப்படுகிறது.

    90 வரை சென்னையில்தான்

    90 வரை சென்னையில்தான்

    90களுக்கு முன்பு வரை சென்னையில்தான் தெலுங்குத் திரையுலகம் செயல்பட்டு வந்தது. பின்னர்தான் ஹைதராபாத்துக்கு இடம் பெயர்ந்தது.

    தெலுங்கானாக்காரர்கள் குறைவு

    தெலுங்கானாக்காரர்கள் குறைவு

    தெலுங்குத் திரையுலகைப் பொறுத்தவரை அதில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கடலோர ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்தான். தெலுங்கானா போராட்டத்தின்போது கூட அதனால்தான் தெலுங்கானா போராட்டக்காரர்கள் தெலுங்குத் திரையுலகினரை குறி வைத்து எதிர்ப்பு காட்டினார்கள்.

    பாதிப்பு வராது

    பாதிப்பு வராது

    தெலுங்கானா பிரிவினையால் தெலுங்குத் திரையுலகுக்கு உடனடி பாதிப்பு வராது என்று பிரபல தயாரிப்பாளர் தம்மரெட்டி பரத்வாஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    30 சதவீதம் விசாகப்பட்டினத்தில்தான்

    30 சதவீதம் விசாகப்பட்டினத்தில்தான்

    மேலும் அவர் கூறுகையில்,30 சதவீத படப்பிடிப்புகள் விசாகப்பட்டனம் உள்ளிட் பிற கடலோர ஆந்திராவில்தான் நடைபெறுவதாக கூறினார்.

    English summary
    The decision to form separate Telangana would not have an immediate impact on the Rs 12,000 crore Telugu film industry based here, but industry-friendly policies would play an important role in its progress in either state, noted film personalities said here.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X