பிக்பாஸ்தான் முக்கியம்.. மகளை ஒப்படைக்க சம்மதம்.. 3 மணி நேரத்துக்குப்பின் முடிவு எடுத்த வனிதா!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Police in Bigg Boss House: பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வனிதா,மீரா கைது?

சென்னை: ஆள்கடத்தல் புகாரில் வனிதா விஜயகுமாரிடம் தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று இன்று விசாரணை நடத்திய நிலையில் குழந்தையின் விருப்பத்தை அறிந்து முடிவு எடுக்க வனிதா சம்மதம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா. இவர் ஏற்கனவே இரண்டு திருமணம் செய்துள்ள நிலையில் மூன்றாவதாக நடன இயக்குனர் ராபர்ட்டை திருமணம் செய்துள்ளார்.

வனிதா ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெனிதா என்ற ஒரு மகள் உள்ளார். வனிதாவுக்கும் ஆனந்தராஜுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2012ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

மகளை அழைத்து வந்த வனிதா

மகளை அழைத்து வந்த வனிதா

இவர்களது மகள் ஜெனிதா, தனது தந்தை ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வருகிறார். இந்த சூழலில் மகள் ஜெனிதாவை கடந்த பிப்ரவரி 6ஆம் வனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.

தகவல் தெரிவிக்கவில்லை

தகவல் தெரிவிக்கவில்லை

ஆனால் இதுவரை ஜெனிதாவை தந்தையிடம் திருப்பி அனுப்பவில்லை. மேலும் அவர் குறித்த தகவல்களையும் ஆனந்தராஜ்க்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

ஆள்கடத்தல் வழக்கு

ஆள்கடத்தல் வழக்கு

இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தராஜ் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட அம்மாநில போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தெலங்கான போலீசார்

தெலங்கான போலீசார்

இந்நிலையில் வனிதா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதன் காரணமாக தெலுங்கானா போலீசார் நசரத் பேட்டை போலீசாரின் உதவியை நாடினர்.

வனிதாவிடம் விசாரணை

வனிதாவிடம் விசாரணை

இதைத்தொடர்ந்து நசரத்பேட்டை போலீசார் உதவியுடன் தெலுங்கானா போலீசார் இன்று சென்னை நசரத்பேட்டையில் ஈவிபி பிலிம் சிட்டிக்குள் அமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். பிக்பாஸ் வீட்டில் வைத்தே போலீசார் வனிதாவிடம் விசாரணை நடத்தினர்.

மகளை அழைத்து வர சம்மதம்

மகளை அழைத்து வர சம்மதம்

சுமார் 3 மணி நேர விசாரணைக்கு பிறகு போலீசாருக்கு வனிதா ஒரு வாக்குறுதியை அளித்துள்ளார். அதாவது, மாலை 5 மணிக்கு பிறகு தனது பாதுகாப்பில் உள்ள மகள் ஜெனிதாவை அழைத்து வர வனிதா விஜயக்குமார் சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஒப்புதல் வாங்க முடிவு

ஒப்புதல் வாங்க முடிவு

இதனைத்தெடர்ந்து மகளிடம், அப்பாவுடன் செல்ல விருப்பமா அல்லது அம்மாவுடன் செல்ல விருப்பமா என கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர். குழந்தையின் விருப்பத்தை பொறுத்து அப்பாவிடமோ அல்லது அம்மாவிடமோ ஒப்படைக்கப்படும் என போலீசார் முடிவு செய்துள்ளனர்.

முடிவு தெரியவரும்

முடிவு தெரியவரும்

இதனால் 5 மணிக்கு பிறகே வனிதா விவகாரத்தில் முடிவு தெரியவரும். பிக்பாஸ் வீட்டிற்குள் போலீஸ் சென்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X