மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ..படப்பிடிப்பில் பயங்கரமா அடிப்பாரு.. கொந்தளித்த பிரபல நடிகர்!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் படப்பிடிப்பில் பயங்கரமா அடிப்பாரு என்று பிரபல நகைச்சுவை நடிகர் டெலிபோன் ராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஜூன் மாதம் திரையரங்கில் வெளியானத் திரைப்படம் மாமன்னன். இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் மாரிசெல்வராஜ் பேசியது பல பிரச்சனையை ஏற்படுத்தியது.

படம் வெளியாகி ஒருமாதத்திற்கு மேலாகியும் இப்படம் விதவிதமான சர்ச்சைகளை கிளப்பிக்கொண்டே இருக்கிறது
கேவலமான செயல்: இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகரான டெலிபோன் ராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், சாதி வெறியை தூண்டும் வகையில் படம் எடுப்பது மிகவும் கேவலமான செயல். இந்த காலத்து இளைஞர்களுக்கு சாதி என்றால் என்ன என்று தெரியவில்லை. மாமன்னன் படம் பார்த்த பிறகு தான், சாதி என்றால் என்ன என்று பல இளைஞர்கள் கேட்கிறார்கள். அனைவரும் மறந்து போன விஷயத்தை மீண்டும் தூண்டிவிடுவது சரியா.
சாதி வெறியர்கள் : மாரி செல்வராஜ், பா ரஞ்சித் போன்றவர்கள் இன்று சாதியை வளர்த்து விடுவதற்காக படம் எடுக்கிறார்கள். எங்களை அடிக்கிறார்கள், கேவலப்படுத்துகிறார்கள். இன்றைய இளைஞர்களிடம் சாதி வெறியை தூண்டி விடுகின்றனர். இவர்களின் படம் வெளியானால், ரசிகர்களாக இல்லை சாதி வெறியாளர்களாக தான் பலர் படம் பார்க்கின்றனர்.
அவர் ஒரு சைக்கோ: மாரிசெல்வராஜ் ஒரு சைக்கோ, இதை உதயநிதியே பேட்டி ஒன்றில், அவர் சைக்கோ சார்.. அடிப்பாரு என்று சொல்லி இருக்கிறார். படப்பிடிப்பில் பல நடிகர்களை அடிக்கிறார். இப்படியெல்லாம் ஒருவரை அடிக்கலாமா? கர்ணன் படத்தில் போலீஸ் அடிக்கும் ஒரு காட்சியில் உண்மையில் ஒரு நடிகையை அப்படி அடித்து இருக்கிறார்கள். அப்போது தான் அது ரியலாக இருக்கும் என்று அடிக்க சொல்லி இருக்கிறார். அந்த பெண் பேசிய ஆடியோ இன்னும் என் போனில் இருக்கிறது.

அடிவாங்க மட்டும் நடிகர்களா: என்னுடைய சொந்த ஊரில் தான் படப்பிடிப்பு நடத்துவேன் என்பது, அடிவாங்குவதற்கு மட்டும் நடிகர்கள், அதற்கு பின்னாடி வசனம் பேசுவதற்கு மட்டும் உங்க சாதி ஆட்களை நிற்கவைப்பது எந்த வகையில் நியாயம். ஜாலியாக சந்தோசமாக படங்களை செய்துகொண்டு போங்க. அதைவிட்டுவிட்டு எதற்காக இப்படியெல்லாம் ஒருவரை அடித்துக் கொடுமை செய்கிறீர்கள்?
சட்டம் போடவேண்டும்: சாதி வெறியை தூண்டும் வகையில் படங்களை எடுக்கக்கூடாது என்று சட்டம் போட வேண்டும், இயக்குநர் சங்கம் இதுபோன்று படம் எடுப்பதை அனுமதிக்கக்கூடாது இப்படி செய்தால் தான் தமிழ் சினிமா வளர்ச்சி அடையும் இல்லை என்றால் இது ஒரு சாபக்கேடாகவே அமைந்துவிடும் என்று டெலிபோன் ராஜ் அந்த பேட்டியில் கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











