சாலை விபத்தில் உயிரிழந்த நடிகர்.. கடவுள் சில சமயங்களில் எவ்வளவு கொடூரமானவர்.. நண்பனின் கண்ணீர் பதிவு!

சென்னை: 22 வயதே ஆன சீரியல் நடிகர், அமன் ஜெய்ஸ்வால் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆடிஷனுக்காக பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பைக் மீது லாரி மோதியதில் அவர் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய அமன் ஜெய்ஸ்வால், தர்திபுத்ரா நந்தினி என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் சோனி டிவி நிகழ்ச்சியான புண்யஷ்லோக் அஹில்யாபாயில் யஷ்வந்த் ராவ் பான்ஸாக நடித்தார். இந்த தொடர், 2021 ஆம் ஆண்டு முதல், 2023 ஆண்டு வரை ஒளிபரப்பானது. மேலும், இவர், ரவி துபே மற்றும் சர்குன் மேத்தாவின் உதரியானியிலும் நடித்திருந்தார்.

death aman jaiswal

உயிரிழந்தார்: இந்நிலையில் நேற்று நடிகர் அமன் ஜெய்ஸ்வால் ஆடிஷனுக்காக பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பைக் மீது லாரி மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை காமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பயன் அளிக்காமல் உயிரிழந்தாக அவரது நெருங்கிய நண்பரான அபினேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். நடிகரின் இழப்பு அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கொடூரமான கடவுள்: நடிகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தர்திபுத்ரா நந்தினி தொடரின் எழுத்தாளர் தீரஜ் மிஸ்ரா, இன்று நீ மறைந்து இருந்தாலும், எங்கள் நினைவுகளில் நீ என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பாய்.. கடவுள் சில சமயங்களில் எவ்வளவு கொடூரமானவராக இருக்கிறார் என்பதை இன்று உன் மரணம் எனக்கு உணர்த்தியிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

death aman jaiswal

கடைசி வீடியோ: நடிகர் அமன் ஜெய்ஸ்வால் புத்தாண்டை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராமில், கடந்த ஆண்டு எப்படி சென்றது என்பதற்கான வீடியோவை வெளியிட்டு, புதிய கனவுகள் மற்றும் பல திட்டங்களுடன் 2025 க்குள் அடியெடுத்து வைக்கிறேன் என அதில் பதிவிட்டு இருந்தார். அதுவே நடிகர் அமன் ஜெய்ஸ்வாலின் கடைசி வீடியோவாகிவிட்டது. தற்போது அவரின் கடைசி வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் அமன் ஜெய்ஸ்வாலை 65.7K பாலோர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் நடிகரின் மறைவு செய்து கேட்டு, கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: death aman jaiswal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X