என் சாவுக்கு... கடிதம் எழுதி வைத்துவிட்டு டி.வி. நடிகர் திடீர் தற்கொலை...அதிர்ச்சியில் குடும்பம்

By

மும்பை: கடிதம் எழுதி வைத்துவிட்டு டி.வி.நடிகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில், அந்தாஸ், லக்‌ஷயா, கல், சலாம் இ இஷ்க் உட்பட சில இந்தி படங்களில் நடித்திருப்பவர் குஷால் பஞ்சாபி. ஏராளமான டி.வி.தொடர்களிலும் நடித்து வந்தார். கேம் ஷோக்களையும் நடத்தி வந்தார்.

இவர் மனைவி பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர். ஷாங்காயில் வசிக்கும் அவரைப் பிரிந்து தனியாக குஷால் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பூட்டப்பட்டிருந்த கதவு

பூட்டப்பட்டிருந்த கதவு

மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் வசித்த குஷாலுக்கு நேற்று அவரது பெற்றோர் போன் செய்தனர். பதில் இல்லாததால் சந்தேகமடைந்த அவர்கள், வீட்டுக்கு வந்து பார்த்தனர். கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.

தூக்கில் தொங்கினார்

தூக்கில் தொங்கினார்

மாற்றுச் சாவி கொண்டு திறந்தனர். உள்ளே தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகk கிடந்தார் குஷால். அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சொத்தில் பாதி

சொத்தில் பாதி

வீட்டில் சோதனை செய்து பார்த்தபோது கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், எனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும் சொத்தில் பாதியை பெற்றோருக்கும் சகோதரிக்கும் கொடுத்தும் விடும்படியும் மீதியை தனது 3 வயது மகனுக்கு கொடுக்கும்படியும் எழுதப்பட்டிருந்தது.

வருத்தத்தில்...

வருத்தத்தில்...


மனைவியை பிரிந்த குஷால் கடந்த சில மாதங்களாக வருத்தத்தில் இருந்ததாகவும் இதனால் இந்த முடிவை அவர் எடுத்ததாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரது தற்கொலை இந்தி சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X