திடீர் மாரடைப்பு..தூக்கத்தில் உயிர் பிரிந்தது.. பிரபல சின்னத்திரை நடிகர் மரணம்..திரையுலகம் இரங்கல்!

By

சென்னை: பிரபல சின்னத்திரை நடிகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

பிரபல சின்னத்திரை நடிகர் சச்சின் குமார். பல்வேறு இந்தி சீரியல்களில் நடித்துள்ளார்.

ஏக்தா கபூர் தயாரித்த 'கஹானி கர் கர் கீ' என்ற தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். லஜ்ஜா என்ற தொடரில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.

போட்டோகிராபர்

போட்டோகிராபர்

இந்த கேரக்டரும் அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. இந்நிலையில் தொடர்ந்து அதிக வாய்ப்புகள் வராததாலும் தனது ஆசை காரணமாகவும் போட்டோகிராபர் ஆக மாறினார். அது தொடர்பான பணிகளை செய்து வந்தார். அதில் சுமூகமாக அவர் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. மும்பை புறநகர் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார் சச்சின் குமார்.

மூச்சு பேச்சில்லை

மூச்சு பேச்சில்லை

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு வழக்கம் போல தூங்குவதற்குச் சென்றார். மறுநாள் காலையில், அவரது அறை நீண்ட நேரமாகத் திறக்கவில்லை. வழக்கமாக சீக்கிரம் எழுந்துவிடும் சச்சின் அன்று, நீண்ட நேரமாக எழுந்துகொள்ளாததால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், ஜன்னல் வழியாகப் பார்த்தனர். அப்போது மூச்சு பேச்சில்லாமல் அவர் கட்டிலில் கிடப்பது தெரியவந்தது.

மாரடைப்பு

மாரடைப்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கதவைத் திறந்து பார்த்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தெரிகிறது. அவருக்கு வயது 40. பின்னர் அவரது இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. லாக்டவுன் காரணமாக குறைவான நபர்களே இதில் கலந்துகொண்டனர்.

சிரித்துக் கொண்டே

சிரித்துக் கொண்டே

இதுபற்றி பேஸ்புக்கில் பதிவு செய்துள்ள பிரபல டிவி நடிகர், ராகேஷ் பால், நானும் அவரும் முன்பு அருகருகே வசித்தோம். சிறந்த மனிதர். எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் முகத்தைக் கொண்டவர். இந்த சின்ன வயதிலேயே மறைந்துவிட்டது தாங்க முடியாததாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

சின்னத்திரை

சின்னத்திரை

இதையடுத்து சின்னத்திரை மற்றும் சினிமா நட்சத்திரங்கள், அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் சையத் ஸுல்ஃபி, வினீத் ரெய்னா உட்பட பலர், சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக, சின்னத்திரை நடிகர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் ஷபிக் அன்சாரி மரணமடைந்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X