பாத்ரூமில் மயங்கி விழுந்து டிவி சீரியல் நடிகை மரணம்
மும்பை: இந்தி தொலைக்காட்சி நடிகை நீரு அகர்வால் இன்று மரணம் அடைந்தார்.
ஏ ஹை மொஹப்பதைன் இந்தி தொலைக்காட்சி தொடரில் பணிப்பெண்ணாக நடித்து பிரபலமானவர் நீரு அகர்வால். அவருக்கு கடந்த 3, 4 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது.

காய்ச்சலால் அவதிப்பட்ட நீரு இன்று அதிகாலை பாத்ரூமுக்கு சென்ற இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பு அவர் உயிர் இழந்தார்.
அவருக்கு கணவர், மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். தாய் இறந்த உடன் மகள் தான் மற்றவர்களுக்கு அந்த தகவலை தெரிவித்துள்ளார். நீருவின் மரண செய்தி அறிந்து ஏ ஹை மொஹப்பதைன் கலைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீருவின் குடும்பத்தாருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். நீரு இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
நடிகை திவ்யங்கா சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, திடீர் என்று எங்கே போய்விட்டீர்கள் நீரு. உங்களின் மகன்கள், நகைகள் பற்றி நாம் கடைசியாக பேசியது தான் நினைவுக்கு வருகிறது. அன்று உங்களுடன் நான் நிறைய பேசியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏன் திடீர் என்று போய்விட்டீர்கள் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











