கல்யாண பொண்ணு ரிசெப்ஷன்ல இப்படியா டிரெஸ் போடுறது.. தொடை தெரிய ஸ்ட்ராப்லெஸ் கவுனில் அசத்திய நடிகை!
மும்பை: நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான நடிகை ஒருவர் ஸ்ட்ராப்லெஸ் கவுனில் தொடை தெரிய மணமகனுடன் அசத்தலாய் பங்கேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சி நடிகை மற்றும் பிக்பாஸ் சீசன் 12ல் பங்கேற்றவர் நேகா பென்ட்ஸ். இவர் தனது நீண்ட நாள் காதலரான ஷருதுல் பயாஸை கடந்த 5ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
மகாராஷ்டிர மாநில பாரம்பரிய முறைப்படி பூனேவில் படு விமர்சையாக நடைபெற்றது இவர்களின் திருமணம். திருமண உடையில் அவ்வளவு அழகாக இருந்தார் நடிகை நேகா பென்ட்ஸ்.
திருமண வரவேற்பு
அவரது உடையை நேகா சவுத்ரி வடிவமைத்திருந்தார். இந்நிலையில் நேற்று அவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கவனம் பெற்ற உடை
இதில் நீல நிற கவுனில் மணமகனின் கையை கோர்த்தப்படி ஒய்யாரமாக வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார் நேகா பென்ட்ஸ். வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் உடுத்தியிருந்த உடை பலரின் கவனத்தையும் பெற்றது.
பவ்யமாக பங்கேற்பு
தொடை வரை லாங் ஓபன் ஸ்ட்ராப்லெஸ் என நீண்ட கவுனில் ஒரு மாடலை போன்று தோன்றினார். மணமகள்கள் என்றாலே பாரம்பரிய உடையில் முழுவதும் கவர் செய்தப்படி பவ்யமாக பங்கேற்பார்கள்
ரிசெப்ஷன் போட்டோ
ஆனால் நேகாவோ வழக்கமான மணப்பெண்களுக்கான எந்த அடையாளமும் இல்லாமல் ஃபேஷன் ஷோவில் பங்கேற்பது போன்று பங்கேற்றிருந்தார். நேகா தனது ரிசெப்ஷன் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்திருக்கிறார்.
மாடர்ன் உடை
மணமகன் ஒரு அழகான கருப்பு உடையைத் தேர்வுசெய்தபோது நேஹா தனது மாடர்ன் மற்றும் புதுப்பாணியான தோற்றத்தில் அசத்தினார். 1999 ஆம் ஆண்டில் 'பியார் கோய் கெல் நஹின்' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் நேகா.
பல மொழிகளில்
பின்னர் மீண்டும் 'தேவதாஸ்' படத்தில் தோன்றினார். நேகா ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் மராத்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அங்கீகாரம்
1995 ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான 'கேப்டன் ஹவுஸ்', 'படோசன்' ஆகியவற்றில் நடித்திருக்கிறார் நேகா. ஆனால் 1996ஆம் ஆண்டு அவர் நடித்த 'ஹஸ்ராடின்' நிகழ்ச்சி அவருக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தது.

மே ஐ கம் இன் மேடம்?
அதன்பிறகு மராத்தி மொழியில் 'பாக்யலட்சுமி', 'மே ஐ கம் இன் மேடம்? ,'ஃபேமிலி டைம் வித் கபில் சர்மா' போன்ற பல நிகழ்ச்சிகளில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











