twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு செல்லும் மற்றொரு நாயகி... மோகன் லால் மகனுக்கு ஜோடியாகிறார்!

    சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

    |

    சென்னை: தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷ் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

    சின்னத்திரையிலிருந்து திரையுலகில் நுழைந்து புகழ் பெற்றவர்கள் பலருண்டு. ஷாருக்கான், மாதவன், சிவகார்த்திகேயன் தொடங்கி பிரியா பவானி சங்கர் வரை இந்தப் பட்டியல் நீளும்.

    Television actress now in silver screen

    இந்த வரிசையில் அண்மையில் இணைந்திருப்பவர்தான் திவ்யா கணேஷ். தமிழ் பெண்ணான இவரது சொந்த ஊர் இராமநாதபுரம். ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருப்பவர் . தோற்றம், நடிப்புத் திறமை என ஒரு சினிமா நடிகைக்கான எல்லா தகுதிகளையும் கொண்டிருக்கிறார்.

    Television actress now in silver screen

    இவர் இப்போது மலையாளத்தில் மோகன்லால் அண்ணன் மகன் நாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். தாழ்வு மனப்பான்மையும் சந்தேகப் புத்தியும் கொண்ட பெண்ணாக அந்தப் படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தை மதுசூதனன் என்பவர் இயக்குகிறார்.

    அதே போல தெலுங்கில் ஒரு படத்திலும் நாயகியாக நடிக்கிறார் திவ்யா கணேஷ். பெரிய திரைக்கு வந்து மலையாளம் தெலுங்குப் படங்களில் வாய்ப்பு பெற்று நடிக்கும், திவ்யா கணேஷ் புதிய தமிழ் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். திவ்யாவின் கனவு, அதிக தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதானாம். அந்தக் கனவு இந்தப் புத்தாண்டில் நிறைவேறட்டும்...!

    Read more about: kollywood television actress
    English summary
    Television actress Divya Ganesh is promoted to silver screen, paring with actor Mohan Lal brother's son in a malayalam movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X