லாக்டவுனால் வேலை இழப்பு.. டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மின் விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை!

By

டெல்லி: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தடுப்பு மருந்துகள்

தடுப்பு மருந்துகள்

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,226,598 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஏழு லட்சத்தை நெருங்கிறது.

லாக்டவுன் காரணமாக

லாக்டவுன் காரணமாக

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக பலர் தங்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் வேலையை இழந்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நிகழ்ச்சி தொகுப்பாளர்

நிகழ்ச்சி தொகுப்பாளர்

டெல்லியை சேர்ந்தவர் பிரியா ஜூனேஜா. பல்வேறு சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகப் பணியாற்றி வந்தார். லாக்டவுன் காரணமாக வேலையை இவர் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 24.

மன அழுத்தம்

மன அழுத்தம்

இதுபற்றி தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று அவரது உடலை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் தற்கொலை செய்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X