Emmy Awards 2024: மிரட்டிவிட்ட எம்மி விருதுகள் அறிவிப்பு.. தட்டித்தூக்கிய தொலைகாட்சி தொடர்கள்!

லால் ஏஞ்சல்ஸ்: திரைத்துறையில் சிறந்து விளங்கக்கூடிய கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக உலகம் முழுவதும் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றது. இதில் ஆஸ்கார் விருது மட்டும் உலகம் முழுவதும் உள்ள திரைத்துறையினரால் அதிகம் கவனிக்கப்படும் விருதாக உள்ளது. அந்த வகையில், சின்னத்திரையில் உலகம் முழுவதும் உள்ளவர்களின் கவனம் ஈர்த்த விருது என்றால் அது, எம்மி விருதுகளைக் கூறலாம். எம்மி விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டாலும், அதில் பிரைம் டைம் மற்றும் டே டைம் என பிரித்துக் கொடுக்கப்படுகின்றது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான எம்மி விருதுகள் நேற்று அதாவது நவம்பர் 25ஆம் தேதி 52வது எம்மி விருதுகள் அறிவிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை கவனித்து இந்த விருது கொடுக்கப்படுகின்றது. மொத்தம் 14 துறைகளில் அதாவது,குழந்தைகளுக்கான அனிமேஷன் தொலைக்காட்சி தொடர்கள் தொடங்கி, கலை, நாடகத் தொடர், விளையாட்டு, ஆவணப்படம், நகைச்சுவை என மொத்தம் 14 துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

emmy awards 2024 emmy awards television awards

1. சிறந்த நடிப்பு, ஆண்- திமோதி ஸ்பால் - தி சிக்ஸ்த் கமாண்ட்மெண்ட் (யுனைடெட் கிங்டம்)

2. சிறந்த நடிப்பு, பெண் - ஆக்பாப்-சுட்டிமோன் சுயெஞ்சரோன்சுகிங் - ஹங்கர் (தாய்லாந்து)

3. சிறந்த நாடகத் தொடர்- Les Gouttes de Dieu (Drops of God) (பிரான்ஸ்)

4. நிறந்த நகைச்சுவை சீரீஸ்- டிவிஷன் பலேர்மோ (அர்ஜென்டினா)

5. சிறந்த ஆவணப்படம்- ஓட்டோ பாக்ஸ்டர் (யுனைடெட் கிங்டம்)

6. சிறந்த ஆர்ட்ஸ் புரோகிராமிங் - பியானோஃபோர்ட் (போலந்து)

emmy awards 2024 emmy awards television awards

7. சிறந்த ஸ்கிரிப்ட் இல்லாத பொழுதுபோக்கு - ரெஸ்ட்டாரண்ட் மிஸ்வெர்ஸ்டாண்ட் (பெல்ஜியம்)

8. சிறந்த குறுகிய வடிவ டெலி சீரீஸ்- பன்ட் டி நோ ரிட்டார்ன் (பாயின்ட் ஆஃப் நோ ரிட்டர்ன்) (ஸ்பெயின்)

9. சிறந்த விளையாட்டு ஆவணப்படம்- பிரான்- தி இம்பாசிபிள் ஃபார்முலா 1 கதை (யுனைடெட் கிங்டம்)

10. சிறந்த டெலினோவெலா- லா ப்ரோமேசா (தி வ்வ்) (ஸ்பெயின்)

11. சிறந்த டிவி திரைப்படம் / குறுந்தொடர்- லீப்ஸ் கைண்ட் (டியர் பேபி) (ஜெர்மனி)

12. சிறந்த குழந்தைகள் அனிமேஷன் தொடர்- டேபி மெக்டாட் (யுனைடெட் கிங்டம்)

emmy awards 2024 emmy awards television awards

13. சிறந்த குழந்தைகள் - ஃபெக்ட்சுவல் - La Vida Secreta de tu Mente (மெக்சிகோ)

14. சிறந்த குழந்தைகள்- லைவ்-ஆக்சன்- என் ஆஃப் ட்ரெங்கீன் (சிறுவர்களில் ஒருவர்) (டென்மார்க்)

என 14 விருகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விருதுக்கு தேர்வானவர்களும், அவர்களின் குழுவினைச் சேர்ந்தவர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X