Don't Miss!
- News
யார் இந்த கே.எஸ்.தென்னரசு? அதிமுகவில் கடந்து வந்த பாதை என்ன? எடப்பாடி டிக் செய்தது எப்படி?
- Technology
84 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக சலுகைகளை வழங்கும் Airtel இன் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பல பெண்களுடன் தொடர்பு..அர்னவால் மனநோயாளி ஆகிவிட்டேன்..கதறும் சீரியல் நடிகை !
சென்னை : நடிகர் அர்னவுக்கு பல பெண்களுடன் தொடர்பு உண்டு என்று நடிகை திவ்யா ஸ்ரீதர் கூறியுள்ளார்.
கேளடி கண்மணி சீரியல் மூலம் பிரபலமான திவ்யா தன்னுடன் இணைந்து நடித்த அர்னவை காதலித்து வந்தார். இதையடுத்து, 5 வருடங்களாக ஒன்றாகவே ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து, கடந்த மாதம் திருமண போட்டோவையும் கர்ப்பாக இருப்பதையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் திவ்யா.
பிரபு
தேவா,
ராஜு
சுந்தரம்,
ஸ்ரீதர்
மாஸ்டர்களிடம்
கஷ்டப்பட்ட
ஜெயம்
ரவி...
எப்படி
தெரியுமா?

அவ்வளவுதான் காதல்
காதல் உணர்வு ஆணுக்கோ பெண்ணுக்கோ வந்துவிட்டால், தலை கால் புரியாது, நல்லது கெட்டது தெரியாது, காதல் மட்டும் தான் கண்ணுக்கு தெரியும். இதுவே திருமணமாகிவிட்டதால், காதல் என்பது மனதைவிட்டு பறந்து போய் மனதிற்குள் சந்தேகம், சண்டை புகுந்து தெய்வீக காதல் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது.

வீதிக்கு வந்த குடும்பசண்டை
5 ஆண்டுகளாக விழுந்து விழுந்து காதலித்து வந்த திவ்யா மற்றும் அர்னவ் ஜோடி தற்போது தங்கள் குடும்ப சண்டையை வீதிக்கு இழுத்து வந்து மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். கணவர் துன்புறுத்தி அடிப்பதாகவும், வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் முதலில் மீடியா முன் தனது காதல் கணவர் குறித்து அடுக்கடுக்கான புகாரை கூறினார்.

உண்மையை மறைத்துவிட்டார்
இதையடுத்து, திவ்யா கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்த அர்னவ், நான் திவ்யாவை அடிக்கவில்லை அவர் தான் என்னை அடித்தார் என்று போட்டோ ஆதாரங்களை காட்டினார். நாங்கள் காதலித்தது சேர்ந்து வாழ்ந்தது எல்லாம் உண்மை தான். அவர் திருமணம் ஆனவர் என்பது தெரிந்து தான் அவரை காதலித்தேன். ஆனால், திவ்யா விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறியிருந்தார். திருமணத்திற்காக விவாகரத்து பேப்பரை கேட்டபோது தான் இந்த ஜனவரியில் தான் விவாகரத்தாகி உள்ளது.

எல்லாமே பொய்
மேலும், அவருக்கு குழந்தை இருப்பதையும் எனக்கு சொல்லவில்லை. அந்த குழந்தையை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால், அவளின் அக்கா குழந்தை என்று தான் என்னிடம் சொன்னார். அவர் சொல்வது எல்லாமே பொய். அதுமட்டுமில்லாமல் அவள் ஒரு மனநோயாளி, மனநோய்க்காக சிகிச்சை எடுத்து வருகிறாள் என்று மருத்துவரின் சீட்டையும் காட்டினார்.

நியாயம் வேண்டும்
அர்னவ் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள திவ்யா, நான் 2017ம் ஆண்டு விவாகரத்துக்கு அப்ளை செய்திருந்தேன். இடையில், கொரோனா வந்ததால் விவாகரத்து கிடைப்பதில் தாமதமானது. மேலும், எனக்கு 6 வயதில் குழந்தை இருப்பது அர்னவுக்கு நன்றாக தெரியும், என் மகள் அவரை அப்பா என்று தான் அழைப்பார் என்றார்.

பல பெண்களுடன் தொடர்பு
மேலும்,அர்னவுக்கு பல பெண்களுடன் தொடர்பு உண்டு அவர்களிடம் அன்பாக பேசி காதல் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் பணம் வாங்கி ஏமாற்றி விடுகிறார். மலேஷியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றி அவரிடம் மிரட்டி பணம் வாங்கி உள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அர்னவ் எனக்கு கொடுத்த மன உளைச்சலால் தான் நான் மன நோயாளியாக மாறினேன் என்று கண்ணீருடன் கூறினார் நடிகை திவ்யா.