விசாரணைக்கு பயந்து பொய் சொன்ன அர்னவ்..மடக்கிபிடித்த போலீஸ்.. நடந்தது என்ன?
சென்னை : நடிகை திவ்யாவை சித்ரவதை செய்த புகாரின் பேரில் கணவர் அர்னவை போலீசார் கைது செய்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். அந்த சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த அர்ணவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ரகசியமாக அர்னவை திருமணம் செய்து கொண்ட திவ்யா,கடந்த மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

நடிகை திவ்யா
நடிகை திவ்யா ஸ்ரீ கண்ணீருடன் தனது கணவர் அர்னவ் அடித்து துன்புறுத்துவதாகவும், செல்லம்மாள் சீரியலில் நடிக்கும் ஒரு நடிகையுடன் தொடர்புவைத்துக்கொண்டு, அவருடன் எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறார். தட்டிக்கேட்டதால் கர்ப்பிணி என்றும் பார்க்காமல் தன்னை அடித்துவிட்டதாக நடிகை திவ்யா கதறி அழுதபடி கூறினார்.

5 வருட காதல்
நானும் அர்னவும் ஒரே சீரியலில் நடித்தோம். அப்போது எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. எனக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் இந்த விஷயம் அர்னவுக்கு தெரிந்து தான் என்னுடன் பழகினார். 5 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். ஆனால், இப்போது என்னை துன்புறுத்துவதாக புகார் கூறியிருந்தார்.

3 பிரிவுகளில் வழக்கு
இந்நிலையில், நடிகை திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் அர்னவ் மீது கொலை மிரட்டல் வன்புணர்வு உள்ளிட் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அர்னவை விசாரனைக்கு ஆஜராகுமாறு பலமுறை அழைக்கப்பட்டார். ஆனால்,அவர் ஆஜராகததால், போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

பொய் சொன்ன அர்னவ்
இன்று அவர் விசாரனைக்கு ஆஜராகவேண்டிய நிலையில், அவரது வழக்கறிஞர் போலீஸ் நிலையத்திற்கு வந்து அர்னவிற்கு கண்ணில் பிரச்சனை இருப்பதால் அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்றும் அவரால் ஆஜராக முடியாது என்று அவரது வழக்கறிஞர் கூறியிருந்தார். ஆனால் அர்னவிற்கு உண்மையில் எந்த பிரச்சனையும் வில்லை அவர் விசாரணைக்கு பயந்து இப்படி ஒரு பொய்யை சொல்லுவது போலீசாருக்கு தெரியவந்தது.

மடக்கி பிடித்த போலீஸ்
இதையடுத்து, பூந்தமல்லியை அடுத்த நேமம் என்ற இடத்தில் படப்பில் இருந்த அர்னவை போலீசார் செய்தனர். அர்னவ் போலீசாரிடம் சிக்கி விடுவோமோ என்ற பயத்தில் விசாரனைக்கு ஆஜராகவில்லை என போலீசார் தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது. இடைப்பட்ட நாட்களில் இவர் முன்ஜாமின் எடுக்கவும் முயற்சி செய்துள்ளார் என போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











