Kavin Birthday: சின்னத்திரை டூ வெள்ளித்திரை.. மூன்றே படத்தில் மாஸ் காட்டிய கவினின் பிறந்தநாள் இன்று!
சென்னை: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலித்துக்கொண்டு இருக்கும் நடிகர்களில் முக்கியமானவராக மாறி உள்ளார் நடிகர் கவின். ஒன்னு, இரண்டு வெற்றிப்படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த கவினின் பிறந்த நாளை அவரது ரசிகர்களால் கொண்டாடி வருகிறது. அவருக்கு இணையத்தின் வழியாக ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
1990ம் ஜூன் 22ந் தேதி பிறந்தவர் நடிகர் கவின். லயோலா கல்லூரியில் படிப்பை முடித்த இவர், விஜய் டிவியில் ஆடிஷன்களில் கலந்து கொண்டு, கானா காணும் காலங்கள் என்ற தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து தாயுமானவன், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்தார். இதில் சரவணன் மீனாட்சியில் தொடரில் அவரது வேட்டையன் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் பதித்துவிட்டது.

நடிகர் கவின்: சின்னத்திரையில் கிடைத்த பெயரை வைத்து வெள்ளித்திரைக்கு சென்ற கவின், சத்ரியன் படத்தில் துணை வேடத்தில் நடித்தார், அதன் பிறகு நட்புனா என்னனு தெரியுமா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். ஆனால், கவினுக்கு சின்னத்திரையில் கிடைத்த வரவேற்ப்பு வெள்ளித்திரையில் கிடைக்காததால், மீண்டும் விஜய் டிவிக்கு வந்த கவின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது லாஸ்லியாவுடன் கிசுகிசுவில் சிக்கிய கவின், வம்பே வேண்டாம்பா சாமி என பணப்பெட்டியுடன் வெளியேறினார்.
லிப்ட்: பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சில ஆண்டு எங்கும் தலைகாட்டாமல் இருந்த கவின். நிறுத்தி நிதான நல்லகதைக்காக காத்திருந்து லிப்ட் படத்தில் நடித்தார். இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் உருவான இந்த படம், தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஓடிடியில் வெளியான போதும் இந்த படத்திற்கு பாராட்டுகள் குவிந்தன. லிப்ட் படத்தை தொடர்ந்து டாடா திரைப்படத்தில் நடித்தார். இப்படம் தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. கல்லூரி மாணவனாக, காதலனாக, அப்பா என மூன்று விதமான கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கவின். இந்த படம் பெற்றோருக்கு மட்டுமில்லாமல் கல்லூரி மாணவர்களுக்கும் பிடித்து இருந்ததால், தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வந்து படம் பார்த்தனர்.
வசூலை அள்ளிய ஸ்டார்: அண்மையில் கவினின் நடிப்பில் ஸ்டார் திரைப்படம் வெளியாகி வசூலை அள்ளி வருகிறது. சினிமாவில் ஹீரோவாக துடிக்கும் ஒரு நடிகரின் வலியை அப்பட்டமாக காட்டி தனது நடிப்பில் வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார் கவின். ஸ்டார் படம் திரையிடப்பட்ட தியேட்டரில் எல்லாம் கூட்டம் அலைமோதியது. ஒரு வளர்ந்த பெரிய நடிகருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் இரண்டு வெற்றிப்படத்தை கொடுத்த கவினுக்கு கிடைப்பதற்கு முக்கிய காரணம், அவர் சிவகார்த்திகேயன் போல சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு போராடி வந்தது தான்.
அடுத்த படவாய்ப்பு: ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் நாயகனா கமிட்டாகி உள்ள கவின், அடுத்ததாக, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் தயாரிக்க உள்ள ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை வெற்றிமாறனிடம்உதவி இயக்குநராக இருந்த விக்ரனன் அசோகன் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கவின் உள்ளாராம். இவ்விரு படங்களின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் கவினுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











